தமிழகத்தில் ஏழு நதிகளில் அதிக மாசு!
தமிழகத்தில் தொழிற்சாலை கழிவுகளால் ஏழு முக்கிய நதிகள் மாசடைந்துள்ளதாகத் தேசிய மாசுக்கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது.
தொழிற்சாலை கழிவுகள், வீட்டுக் கழிவுகளை நதிகளில் கலப்பதால் தமிழகத்தில் காவிரி, பாலாறு, பவானி, தாமிரபரணி, மணிமுத்தாறு, வசிஷ்டா உட்பட ஏழு நதிகள் மிகவும் மோசமாக மாசடைந்து வருவதாக மாசுக்கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கண்காணிக்கப்பட்ட 445 நதிகளில் 275 நதிகள் மாசடைந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் மாசடைந்து வரும் ஏழு நதிகளும் விவசாயத்துக்கும் குடிநீருக்கும் ஆதாரமாக இருந்து வருகிறதென்பது நினைவுகூரத்தக்கது.
இவ்வாறு மாசடைந்துவரும் நதிகளை மீட்க அந்தந்த மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாசுக்கட்டுப்பாடு வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.
சமீபத்தில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஹர்ஷ் வர்தன், மகாராஷ்டிராவில் 49, அசாமில் 28, மத்தியப்பிரதேசத்தில் 21, குஜராத்தில் 20, மேற்குவங்கத்தில் 17, கர்நாடகாவில் 15, கேரளா மற்றும் உத்தரப்பிரதேசத்தில் 13, மணிப்பூர் மற்றும் ஒடிசாவில் 12, மேகாலயாவில் 10, ஜம்மு காஷ்மீரில் 9 நதிகளும் மாசடைந்திருப்பதாகத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் ஏழு நதிகளில் அதிக மாசு!
Reviewed by நமதூர் செய்திகள்
on
23:58:00
Rating:
No comments: