“⁠ஜோக்கர்” திரைப்பட விமர்சனம் – நெல்லை ஆதில்


அரசியல், அதிகாரம், சட்டம், நீதி இவையெல்லாம் மக்களுக்காக ஒரு காலத்தில் இருந்து வந்தது ஆனால் இன்றோ இந்த நிலையெல்லாம் முற்றிலும் மாறிவிட்டது. சாமானிய மக்களுக்கு எந்த ஒரு நீதியும் கிடைப்பதில்லை,எந்த ஒரு திட்டமும் மக்களுக்கு சென்றடைவதில்லை அப்படி ஒரு சாமானியனின் வாழ்க்கையில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை கச்சிதமாக படமாக்கியிருக்கிறார் இயக்குனர்.
சினிமா என்றாலே வெறும் பொழுதுபோக்கு என்பதை தாண்டி அது மக்களுக்கான குரலாக குறிப்பாக ஒடுக்கப்பட்டவர்களுக்கான குரலாக இருக்க வேண்டும். தர்மபுரி மாவட்டத்தில் ஒரு சிரிய கிராமத்தில் ஓட்டு வீட்டில் வசித்து வருபவர் தான் மன்னர் மன்னன் இந்திய நாட்டின் ஜனாதிபதி(!).ஆச்சரியமாக இருக்கிறதா? எனக்கும் அப்படித்தான் இருந்தது. அதை விட பெரிய ஆச்சரியம் ஜனாதிபதியின் வீட்டில் கழிவறை கூட இல்லை. மக்களுக்கான ஜனாதிபதியாக வலம் வரும் நமது ஹீரோ படும் இன்னல்கள் தான் படத்தின் முழுக்கதை.
மணல் கொள்ளை, கல்விக்கொள்ளை, அரசாங்கம், அரசு ஊழியர்கள், அரசியல்கட்சிகள், மத்தியம், மாநிலம் என அனைத்து ஊழல்வாதிகள் மக்களை சுரண்டுபவர்களை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறார் இயக்குனர். படத்தின் பாடல் வரிகளுக்கும், வசனங்களுக்கும் திரையரங்தில் சரியான வரவேற்பு. மக்களுக்கான பல்வேறு பிரச்சனைகளுக்கு நீதி வேண்டி பல போராட்டங்களில் ஈடுபடுகிறார் ஜனாதிபதி. இந்திய நாட்டில் நீதி எளியவர்களுக்கு எட்டாக்கனியாக இருப்பதை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார் இயக்குனர்.
மேலும் மதுவினால் சீரழியும் குடும்பம், மக்களை வைத்து சம்பாதிக்கும் மருத்துவமனை எனத்தொடங்கி முதல் அமைச்சர், பிரதமர், இஃப்தார் வரை அனைத்தையும் சல்லடை போட்டு காட்டயிருக்கின்றனர். மக்களுக்காக வீதியில் இறங்கி போறாடும் ஜனாதிபதி உண்மையில் இந்தியாவின் ஜனாதிபதிதானா ஏன் அவர் அவ்வாறு மாறினார் என்பது மீதி கதை.
joker-photos-images-41281
மக்களுக்காக நீதி வேண்டி போராடுபவர்களை மக்களே பைத்தியம் என்றும், பிழைக்கத்தெரியாதவன் என்றும் எள்ளி நகையாடுவதையெல்லாம் போராளிகள் கண்டுகொள்வதில்லை. அவர்களுக்கு நீதி தான் முக்கியம். அவர்கள் நீதி கிடைக்கும் வரை போராடுவார்கள் என்பது கதையின் முக்கிய அம்சம்.
மக்களுக்காக வாழ்பவர்கள் தான் உண்மையில் ஹீரோக்கள் ஆனால் அவர்களை ஜோக்கராக சித்தரிக்கும் நிலைமை மாறும் நாள் எந்நாளோ?
-நெல்லை ஆதில்
http://www.thoothuonline.com/archives/76668
“⁠ஜோக்கர்” திரைப்பட விமர்சனம் – நெல்லை ஆதில் “⁠ஜோக்கர்” திரைப்பட விமர்சனம் – நெல்லை ஆதில் Reviewed by நமதூர் செய்திகள் on 20:55:00 Rating: 5

No comments:

Powered by Blogger.