மதங்களின் பெயரால் இந்தியாவில் அதிக வன்முறை – அமெரிக்கா அறிக்கை


கடந்த 2015ல் இந்தியா அதிகப்படியான குறிப்பிட்ட சில மதங்களைச் சேர்ந்தவர்கள் கொலை செய்யப்படுதல், தாக்கப்படுதல், மத எதிர்ப்பு துவேஷங்கள், கலவரங்கள், கட்டாய மதமாற்றம் போன்ற எண்ணற்ற மத ரீதியான அநீதங்களைச் சந்துத்துள்ளதாக வாஷிங்டனில் வெளியான அரசு அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
சர்வதேச மதச் சுதந்திரம் என்ற அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது : மதச்சார்பற்ற நாடான இந்தியாவில் இந்து மதத்தைப் பள்ளிக்கூடங்களில் போதிக்க வேண்டும் என்ற அரசின் மத வேறுபாட்டு நடத்தையின் மீது மக்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். மத்திய அரசோடு இணைந்து பல மாநில அரசுகளும் மத துவேஷச் செயல்களில் ஈடுபட்டன. முஸ்லிம்கள், தலித்துகள் போன்ற சிறுபான்மையினத்தைச் சேர்ந்த அப்பாவி மக்கள் மீதான தாக்குதல்களுக்குக் காவல்துறையினரும் துணை போனது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. மக்கள் தொடுத்த தாக்குதல் வழக்குகளில் காவல்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் தட்டிக்கழித்தது. அது மட்டுமின்றி, தாக்கியவர்களைத் தண்டிக்காமல் வழக்கு தொடுத்த பாதிக்கப்பட்டவர்களைத் தண்டித்த கொடுமையையும் நிகழ்த்தியது இந்தியக் காவல்துறை.
கல்வித்துறையில் இந்துமதத்தைக் கட்டாயமாகக் கற்பித்தல், கட்டாய மதமாற்றம், அரசியல்வாதிகளின் மதரீதியான வெறுப்புப்பேச்சு, மதக்கலவரங்கள் என அனைத்தும் கேட்பாரின்றி கட்டவிழ்த்து விடப்பட்டன. இதற்கிடையில் பிரதமர் மோடி மதநம்பிக்கை மக்களின் உரிமை என்று கூறியும் அவரது கட்சியினர் மததுவேஷங்களை நிகழ்த்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
மோடியின் ஓராண்டு ஆட்சியில் இந்திய மக்கள் அனுபவிக்கும் மத சுதந்திரம் மீது அமெரிக்கா முதன்முறையாக வெளியிட்ட கருத்து இதுவே. மக்களின் மத நம்பிக்கைகளைப் பாதுகாப்பதாக மோடி பல சந்தர்ப்பங்களில் வெளிப்படையாகக் கூறியதாகவும் அவ்வறிக்கை கூறுகிறது.
பஞ்சாப் உள்ளிட்ட பல பகுதிகளில் கிறுத்துவர்கள் மீதான மத வன்முறைகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அரசோ காவல்துறையோ சாதகமாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது. பஞ்சாபில் சீக்கியக் கலவரத்தைக் காவல்துறை கட்டுப்படுத்தும்போது இரு சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்.”
அமெரிக்கத் துணை மாநில செயலாளர் அந்தோணி ப்ளின்கென் தலைமையில் இவ்வறிக்கை வெளிவந்துள்ளது.
மதங்களின் பெயரால் இந்தியாவில் அதிக வன்முறை – அமெரிக்கா அறிக்கை மதங்களின் பெயரால் இந்தியாவில் அதிக வன்முறை – அமெரிக்கா அறிக்கை Reviewed by நமதூர் செய்திகள் on 04:07:00 Rating: 5

No comments:

Powered by Blogger.