தலித்கள் மீதான தாக்குதல். ராஜினாமா செய்த JNUவின் ஏ.பி.வி.பி துணை தலைவர்.



ஜவஹர்லால் நேரு பல்கலைகழக ஏ.பி.வி.பி அமைப்பின் துணைத் தலைவர் ஜதின் கோராயா, தலித்கள் மீதான ஏ.பி.வி.பியின் நிலை குறித்து தான் சோர்வடைந்து விட்டதாக கூறி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கருத்து வேறுபாட்டால் பா.ஜ.க வின் மாணவ அமைப்பில் இருந்து விலகிச்செல்லும் நான்காவது தலைவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த பிப்ரவரி மாதத்தில் ஏ.பி.வி.பி யின் துணை செயலாளர் பிரதீப் நார்வால் உட்பட மூன்று பேர் பல்கலைகழகத்தில் நடந்த மோதல்களை அடுத்து தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.
தனது ராஜினாமா குறித்து ஜதின் கோராயா கூறுகையில்,” நான் ஜாதியவாத, ஆணாதிக்கவாத, ஏ.பி.வி.பி யின் துணைத் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்கிறேன். ஏ.பி.வி.பி யின் நடத்தை அவர்களின் ஃபாசிச சூழ்ச்சிகளையும், அவர்களது பழமைவாத முகத்தையும் வெளிப்படுத்திவிட்டது” என்று கூறியுள்ளார்.

மேலும், “அவர்கள் ரோஹித் வெமுலாவின் நிறுவன கொலையில் இருந்து 9 ஆம் பிப்ரவரி JNU சம்பவத்திலும், கண்ணியத்திர்காகவும் சமூக நீதிக்காவும் உணா வில் ஏற்பட்ட தலித் எழுச்சியிலும் பிற்போக்குத்தனமான நிலையையே எடுத்துள்ளனர்” என்று கூறியுள்ளார்.

“நமது சொந்த பல்கலைகழகத்தையே போலியான தேசியவாத மற்றும் தேச விரோத கூற்றுகள் கொண்டு இழிவு படுத்துவதும், அவர்களது சிதைவுற்ற, அருவருப்பான தேசியவாத கொள்கைகளை நம் மீது திணிப்பதும் வியப்பாக உள்ளது” என்று கூறியுள்ளார்.

“ரோஹித் வெமுலாவின் நிறுவன கொலையை தற்கொலை என்று அவர்கள் சித்தரித்து அதில் ஈடுபட்டவர்களை பாதுகாப்பதில் இருந்து அவர்கள் சமூக நீதிக்காக கொள்கைகளை நிலைநாட்ட உறுதி கொண்டவர்கள் அல்ல என்பது விளங்கும்” என்று கூறியுள்ளார்.
இன்னும், “தலித்களும் முஸ்லிம்களும் நாடு முழுவதும் பசுவின் பெயரால் கொல்லப்படுகின்றனர். இந்த பசு பாதுகாவலர்களுக்கு ஃபாசிச சக்திகள் தலித்களை அடக்கி, கேவலப்படுத்தி, அடித்துக் கொல்ல அனுமதி வழங்கியுள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.

“சமத்துவமின்மை, ஜாதி பாகுபாடு, சந்தர்ப்பவாதம், மற்றும் ஆதிக்கவாதம் ஆகியவற்றின் மேல் கட்டப்பட்ட ஒரு இயக்கம் எந்த ஒரு வகையில் தேசியவாத இயக்கம் என்று கூறிக்கொள்ள முடியாது” என்றும் அவர் கூறியுள்ளார்.

தற்போது ஏ.பி.வி.பி யில் இருந்து விலகியுள்ள கோராயா வேறு எந்த அரசியல் அமைப்பிலும் சேருவதில் ஆர்வமில்லை என்று கூறியுள்ளார்.
தலித்கள் மீதான தாக்குதல். ராஜினாமா செய்த JNUவின் ஏ.பி.வி.பி துணை தலைவர். தலித்கள் மீதான தாக்குதல். ராஜினாமா செய்த JNUவின் ஏ.பி.வி.பி துணை தலைவர். Reviewed by நமதூர் செய்திகள் on 04:10:00 Rating: 5

No comments:

Powered by Blogger.