காஸா முற்றுகையை உடைக்க பயணித்த ஜைதுனா பெண்கள் படகை கைப்பற்றிய இஸ்ரேலிய கடற்படை


ஃபலஸ்தீன்நின் காஸா பகுதியை நோக்கி வரும் ஜைதுனா பெண்கள் படகை இஸ்ரேலிய கடற்படை வழிமறித்துள்ளது. காஸா மீது சுமத்தப்பட்டுள்ள சட்டவிரோத கடல் வழி முற்றுகையை தகர்க்கும் நோக்கத்துடனும் அப்பகுதி மக்களுக்கு தேவையான அத்தியாவசிய நிவாரணப் பொருட்களுடனும் காஸா நோக்கி பயணித்த இந்த படகினை பெண்கள் வழி நடத்துகின்றனர்.
இப்படகின் தொடர்பு துண்டிக்கப்பட்டது என்று செய்தி வெளியான சில நிமிடங்களில் ஊடகங்களில் இப்படகை இஸ்ரேலிய கடற்படை வழிமறித்து கைப்பற்றியுள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த ஜைதுன்யா படகுடன் மற்றொரு பெண்கள் படகான அமல் சேர்ந்து காஸா வருவதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் சில தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அமல் படகினால் இந்த பயணத்தை திட்டமிட்டவாறு முடிக்க இயலவில்லை.
இது குறித்து வெளியாத செய்திகளின் படி, ஜைதுன்யா படகினை இஸ்ரேலிய கடற்படை சூழ்ந்துள்ளது என்றும் அப்படகு காஸா நுழைவதற்கு முன் திருப்பிவிடுமாறு அப்படகின் கேப்டன் கலோனல் அன் ரைட் நிற்பந்திக்கப்படுவார் என்றும் எதிர்ப்பார்க்கப்பட்டது.
ஜைதுன்யா படகு தற்போது சர்வதேச கடற்பகுதியில் இருக்கிறது. அப்படகில் 13 ஆர்வலர்கள் உள்ளனர். இந்த படகினை வரவேற்க ஆயிரக்கணக்கான காஸா மக்கள் கடற்கரையில் இருந்து ஃபலஸ்தீன கொடிகளை அசைத்து இப்படகினை எதிர்பார்த்தவண்ணம் உள்ளனர்.
தற்போது இப்படகினை கைப்பற்றியுள்ள இஸ்ரேலிய கடற்படை அதனை அஷ்டோத் துறைமுகத்திற்கு எடுத்துச்செல்லும் எனவும் இப்படகில் உள்ளவர்கள் இஸ்ரேலிய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு அங்கு இவர்கள் விசாரிக்கப்பட்டு நாடு கடத்தப்படுவார்கள் என்று நம்பப்படுகிறது
இதுகுறித்து கருத்து தெரிவிக்க இஸ்ரேலிய இராணுவம் மறுத்துவிட்டது.

காஸா மீதான சட்டவிரோத கடல் முற்றுகையை உடைக்கும் நோக்கத்துடன் இந்த படகு புறப்பட்டது. 2010 ஆம் ஆண்டு துருக்கியின் ஃப்ரீடம் ஃப்ளோட்டிலா படகு, மாவி மர்மரா, ஆகியவை சர்வதேச கடற்ப்பகுதியில் இருக்கும் போது இஸ்ரேலிய கடற்படை அந்த படகிற்குள் நுழைந்து 10 துருக்கிய ஆர்வலர்களை கொலை செய்தது.

அதில் இருந்து காஸா மீதான இஸ்ரேலின் இந்த முற்றுகையை உடைக்கும் முயற்சிகள் தொடர்ந்தவண்ணம் உள்ளன.
காஸா முற்றுகையை உடைக்க பயணித்த ஜைதுனா பெண்கள் படகை கைப்பற்றிய இஸ்ரேலிய கடற்படை காஸா முற்றுகையை உடைக்க பயணித்த ஜைதுனா பெண்கள் படகை கைப்பற்றிய இஸ்ரேலிய கடற்படை Reviewed by நமதூர் செய்திகள் on 23:48:00 Rating: 5

No comments:

Powered by Blogger.