காற்று மாசு: கட்டுப்படுத்த ரூ.200 கோடி!

காற்று மாசு: கட்டுப்படுத்த ரூ.200 கோடி!

வட இந்தியாவில் அதிகரித்துவரும் காற்று மாசைக் கட்டுப்படுத்த மத்திய அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் அழுத்தம் கொடுத்து வருகிறது. வடக்குப் பிராந்தியத்தில் பயிர் சக்கைகளை எரிப்பதைக் கையாள மாநில அரசுகளுக்கு இதுவரையில் 200 கோடி ரூபாய் நிதியை வழங்கியுள்ளதாக நவம்பர் 10ஆம் தேதியன்று மத்திய அரசு தெரிவித்திருந்தது.
மத்திய அரசு வழங்கிய நிதியை பஞ்சாபைத் தவிர மற்ற அனைத்து மாநிலங்களும் பயன்படுத்திவிட்டதாக வேளாண் அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ராபி பருவத்துக்கு தயாராகி வரும் விவசாயிகள், பழைய பயிர்களிலிருந்து மிச்சமான சக்கைகளை எரித்து வருகின்றனர். இதனால் வட மாநிலங்களில் காற்று மாசு அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. முக்கியமாக டெல்லியில் காற்று மாசு கடுமையாக அதிகரித்துள்ளது.
மத்திய அரசின் நிதியை இன்னும் பஞ்சாப் அரசு பயன்படுத்தவில்லை என்று பஞ்சாப் அரசின் உயரதிகாரி ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளார். இருப்பினும், மானிய உதவி இருப்பதாக விவசாயிகளுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏராளமான விவசாயிகள் மானிய உதவியுடன் இயந்திரங்களை வாங்கிவிட்டதாக அவர் கூறினார்.
காற்று மாசு: கட்டுப்படுத்த ரூ.200 கோடி! காற்று மாசு: கட்டுப்படுத்த ரூ.200 கோடி! Reviewed by நமதூர் செய்திகள் on 23:46:00 Rating: 5

No comments:

Powered by Blogger.