ரூ.6 லட்சம் மதிப்பிலான கள்ள நோட்டுகள் பறிமுதல்!

ரூ.6 லட்சம் மதிப்பிலான கள்ள நோட்டுகள் பறிமுதல்!

மேற்கு வங்கத்தில் ரூ.6 லட்சம் மதிப்பிலான கள்ள நோட்டுகளைப் பறிமுதல் செய்த காவல் துறையினர் இதுதொடர்பாக மூன்று பேரை கைது செய்துள்ளனர்.
பாகிஸ்தானில் கள்ள நோட்டுகள் தயாரிக்கப்பட்டு இந்தியாவின் வடமாநிலங்களில் விற்கப்படுவதாகக் காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இந்த நிலையில் மேற்கு வங்கம் முர்ஷிதாபாத் நகரில் கள்ள நோட்டுகள் அதிக அளவில் புழக்கத்தில் விடப்படுவதாகக் கிடைத்த தகவலையடுத்து காவல் துறை சிறப்புப் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 298 இரண்டாயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் வைத்திருந்த மூன்று பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 5,96,000 ரூபாயையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இதுபோன்று நேற்று முன்தினம் (நவம்பர் 17) மேற்கு வங்கம் மாநிலம் ஆனந்த் விகார் பகுதியில் காஷித் என்பவரிடம் 330 போலி இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை டெல்லி சிறப்பு போலீஸார் பறிமுதல் செய்தனர். அப்போது பாகிஸ்தானில் இருந்து கள்ள நோட்டுகள் கொண்டுவரப்படுவதாகவும் அப்படியான கள்ள நோட்டுகளில் இரண்டாயிரம் ரூபாயை ரூ.900க்கு விற்பதாகவும், நூறு ரூபாயை 30 ரூபாய்க்கு விற்பதாகவும் காஷித் போலீஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இதுபோன்று அடுத்தடுத்த நாள்களில் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பணமதிப்பழிப்பு நடவடிக்கையின்போது புதிதாகத் தயாரிக்கப்பட்ட இரண்டாயிரம் ரூபாயைக் கள்ள நோட்டுகளாக அச்சிட முடியாது என்று மத்திய அரசு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
ரூ.6 லட்சம் மதிப்பிலான கள்ள நோட்டுகள் பறிமுதல்! ரூ.6 லட்சம் மதிப்பிலான கள்ள நோட்டுகள் பறிமுதல்! Reviewed by நமதூர் செய்திகள் on 03:03:00 Rating: 5

No comments:

Powered by Blogger.