பகத் சிங் நினைவு அணிவகுப்பு: அனுமதி வழங்கலாம்!

பகத் சிங் நினைவு அணிவகுப்பு: அனுமதி வழங்கலாம்!

பாசிசத்துக்கு எதிரான மக்கள் மேடை சார்பில் தமிழகம் முழுவதும் மதச்சார்பின்மைக்கான அணிவகுப்பு நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி வழங்குவது குறித்து மார்ச் 23ஆம் தேதிக்குள் பதில் அளிக்க காவல் துறைக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சுதந்திரப் போராட்ட தியாகிகளான பகத் சிங், ராஜ குரு மற்றும் சுக்தேவ் ஆகியோரின் நினைவு நாள்களை முன்னிட்டு சென்னை தொடங்கி கன்னியாகுமரி வரை அமைதி, ஒற்றுமை மற்றும் மதச்சார்பின்மையை வலியுறுத்தி அணிவகுப்பு நடத்த ‘பாசிசத்துக்கு எதிரான மக்கள் மேடை’ அமைப்புக்குக் காவல் துறை அனுமதி மறுத்தது. இதையடுத்து, அணிவகுப்பு நடத்த அனுமதி வழங்க உத்தரவிடக்கோரி இந்த அமைப்பின் உறுப்பினர் சிரிலா என்பவர் தொடர்ந்த வழக்கு நேற்று (மார்ச் 20) நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, ‘தமிழகத்தில் ரத யாத்திரை நடத்த ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு அனுமதி வழங்கும் காவல் துறை, தங்களுடைய அமைப்புக்கு அனுமதி வழங்க மறுப்பது தனிமனித அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது’ என மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர். பிரசாத் வாதிட்டார்.
இதையடுத்து, அணிவகுப்புக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கலாம் எனக் கருத்து தெரிவித்த நீதிபதி, அணிவகுப்பு நடத்துவதற்கான நிபந்தனைகளை மார்ச் 22ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் எனக் காவல் துறைக்கு உத்தரவிட்டார்.
பகத் சிங் நினைவு அணிவகுப்பு: அனுமதி வழங்கலாம்! பகத் சிங் நினைவு அணிவகுப்பு: அனுமதி வழங்கலாம்! Reviewed by நமதூர் செய்திகள் on 03:57:00 Rating: 5

No comments:

Powered by Blogger.