நாடாளுமன்றத்தில் பாஜக பெரும்பான்மை இழந்தது - காங்கிரஸ்!

நாடாளு மன்றத்தில் பாஜக பெரும்பான்மை இழந்தது - காங்கிரஸ்!
புதுடெல்லி (15 மார்ச் 2018): நாடாளு மன்றத்தில் பாஜக பெரும்பான்மை இழந்து விட்டது என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
உத்திர பிரதேசம் மற்றும் பிகார் மாநிலங்களில் நடைபெற்ற இடைத் தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்துள்ளது. இதன் மூலம் பெரும்பான்மை இழந்து விட்டது என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜிவாலா கூறியுள்ளார்.
இது தொடர்பாக சுர்ஜிவாலா தமது ட்விட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்த கருத்தில், " 2017, 2018-ல் நடைபெற்ற 10 லோக்சபா தொகுதி இடைத் தேர்தல்களில் பாஜக தோல்வியைத் தழுவியுளது. பாஜகவின் அகம்பாவம், முறைகேடான ஆட்சி மீது மக்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். 2017-ம் ஆண்டு அமிர்தசரஸ், ஸ்ரீநகர், மலப்புரம், குருதாஸ்பூர் இடைத்தேர்தல்களிலும் இந்த ஆண்டு ஆஜ்மீர், ஆல்வார், உலுபேரியா, கோரக்பூர், புல்பூர் இடைத் தேர்தல்களிலும் பாஜக தோல்வியைத் தழுவியுள்ளது. பாஜகவின் கீர்த்தி ஆசாத் எம்பி கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். சத்ருகன் சின்ஹாவும் பாஜகவை கடுமையாக விமர்சித்து வருகிறார். ஆகையால் பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லை." என்று தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் பாஜக பெரும்பான்மை இழந்தது - காங்கிரஸ்! நாடாளுமன்றத்தில் பாஜக பெரும்பான்மை இழந்தது - காங்கிரஸ்! Reviewed by நமதூர் செய்திகள் on 23:43:00 Rating: 5

No comments:

Powered by Blogger.