இலங்கை: மூன்று நாட்களுக்கு சமூக வலைதளங்கள் முடக்கம்!

இலங்கை: மூன்று நாட்களுக்கு சமூக வலைதளங்கள் முடக்கம்!

இலங்கையின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு கண்டி மாவட்டம் உட்பட நாட்டின் சில முக்கிய இடங்களில் வன்முறை பரவுதலைத் தடுக்க முக்கியச் சமூக வலைதளங்கள் முடக்கப்பட்டுள்ளதாக தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இலங்கையில் மார்ச் 4 ஆம் தேதி முஸ்லிம்களுக்கும் புத்த மதத்தினருக்குமிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொல்லப்பட்டார். முஸ்லிமுக்குச் சொந்தமான பல வீடுகளும் வணிக வளாகங்களும் தீக்கிரையாகின. இதையடுத்து, தாக்குதல் தீவிரமடைந்தது.
இதைத் தொடர்ந்து, நேற்று (மார்ச் 6) நாட்டில் அவசர நிலை பிரகடனத்தை அந்நாட்டு அரசு அமல்படுத்தியது.
இந்நிலையில், பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு முக்கிய சமூக வலைதளங்களான வைபர், ஐஎம்ஓ போன்றவை மூன்று நாட்களுக்கு முடக்கப்பட்டுள்ளதாக தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக் குழு தெரிவித்துள்ளது.
வன்முறையைத் தூண்டும் கருத்துக்கள் வெளியிடுவதன் காரணமாக ஃபேஸ்புக் முடக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சகம் விடுத்த கோரிக்கையை அடுத்து, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இலங்கை: மூன்று நாட்களுக்கு சமூக வலைதளங்கள் முடக்கம்! இலங்கை: மூன்று நாட்களுக்கு சமூக வலைதளங்கள் முடக்கம்! Reviewed by நமதூர் செய்திகள் on 00:04:00 Rating: 5

No comments:

Powered by Blogger.