டெல்லியை கைப்பற்ற ராணுவக் கலக முயற்சி நடந்ததா? நடந்தது என்ன?
2012ஆம் ஆண்டு தலைநகர் டெல்லியை நோக்கி இந்திய ராணுவப் படையினர் அனுமதியின்றி நகர்ந்ததாக வெளியான செய்திகள் உண்மைதான் என்று காங்கிரஸ் கட்சியின் மணீஷ் திவாரி கூறியுள்ளார்.
கடந்த 2012ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பிரபல ஆங்கில நாளிதழ் வெளியிட்ட செய்தியில், ’தில்லியில் ராணுவக்கலகம் மூலம் ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்யப்பட்டது’ என்று தெரிவித்திருந்தது.
மேலும், 2012 ஜனவரி மாதம் ஹரியானா மாநிலம் ஹிசார் பகுதியிலிருந்து ராணுவப்படையின் இரண்டு யூனிட்கள் எந்தவித அறிவுறுத்தலும், அனுமதியுமின்றி தில்லி நோக்கி நகரவிருந்ததாக உளவுத்துறை தகவல்களை மேற்கோள் காட்டி மேற்படி ஆங்கில நாளேடு பிரத்யேக செய்தி வெளியிட்டிருந்தது. பின்னர் அந்த நாளேடு அதை மறுத்து செய்தி வெளியிட்டது.
இருப்பினும் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோணி ஆகியோர் மறுத்தனர். இச்செய்தி வெளியானபோதுதான், ராணுவ தலைமை தளபதி வி.கே.சிங்கின் வயது விவகாரம் தொடர்பாக அரசுக்கும் அவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருந்தது
அதனை மத்திய அமைச்சரும் முன்னாள் ராணுவத் தளபதியுமான வி.கே.சிங் கடுமையாக மறுத்துள்ளார். 2012ஆம் ஆண்டு இந்திய ராணுவத்தின் 2 முக்கியப் படைகள் டெல்லியை நோக்கி நகர்ந்தன என்று இந்தியன் எக்ஸ்பிரஸில் வெளியான செய்தி உண்மைதான் என்று மணீஷ் திவாரி புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கேள்விக்குப் பதில் அளிக்கையில் தெரிவித்தார்.
இதுகுறித்து மணீஷ் திவாரி கூறிய போது, “அந்தக் காலக்கட்டத்தில் (2012) நான் பாதுகாப்பு நிலைக்குழுவில் சேவையாற்றினேன், அப்போது வெளியான இந்த செய்தி துரதிர்ஷ்டவசமானதுதான். ஆனால் ராணுவ நகர்வு செய்தி உண்மைதான், அந்த செய்தி அறிக்கை சரியானதுதான். நான் விவாதத்துக்குள் இறங்க விரும்பவில்லை, நான் சொல்வதெல்லாம் நான் அறிந்தவரை அந்த ராணுவ நகர்வு செய்தி உண்மைதான்” என்றார்.
`2012-ம் ஆண்டு ஜனவரி 16ம் தேதி தில்லியை நோக்கி பெரியஅளவில் ராணுவம் நகர்ந்தது என்பது தொடர்பான தகவல்கள் உண்மையானதே’ என்று அப்போது அமைச்சராக இருந்த மணிஷ் திவாரி, தற்போது கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து, காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் ஐயர் கூறுகையில், `குறிப்பிட்ட நாளில் அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்திற்கு எதிராக ஏதோ நடந்து உள்ளது என்பதை காட்டுகிறது. இதற்கு காரணமான தளபதி வி.கே.சிங் போன்றவர்களை மத்திய அமைச்சர்களாக நியமனம் செய்வது மிகவும் தவறானது. இப்பிரச்சனை மீண்டும் வெளியாகியிருப்பது மிகவும் நல்லது’ என்று கூறியுள்ளார்.
டெல்லியை கைப்பற்ற ராணுவக் கலக முயற்சி நடந்ததா? நடந்தது என்ன?
Reviewed by நமதூர் செய்திகள்
on
00:03:00
Rating:
No comments: