என்னை யாரும் மிரட்ட முடியாது: கீர்த்தி ஆசாத்
தன்னை யாரும் மிரட்ட முடியாது என்றும்பாஜக மேலிடம் தனக்கு எதிராக என்ன முடிவு எடுத்தாலும் ஏற்றுக்கொள்வேன் என்றும் கீர்த்தி ஆசாத் கூறியுள்ளார்.
மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி டெல்லி கிரிக்கெட் சங்க தலைவராக இருந்த போது, பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாஜக எம்.பி.யுமான கீர்த்தி ஆசாத் புகார் கூறினார்.
அரசியல் வட்டாரங்களில் இந்த விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டது. இதனால் அவரை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்து, பாஜக தலைமை நடவடிக்கை எடுத்தது.
அத்துடன், மேலும் அவரை கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்குவது குறித்தும் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கேரளாவில் செய்தியாளர்களை சந்தித்த கீர்த்தி ஆசாத், "கட்சி எனக்கு எதிராக எந்த முடிவு எடுத்தாலும் ஏற்றுக்கொள்வேன்.
ஆனால், என்னை யாரும் மிரட்ட முடியாது. நான் விடுதலைக்ககாகவும், ஊழலுக்கு எதிராகவும் போராடுபவன்
எனது உடலில் கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரையும், இறுதி மூச்சு வரையிலும் ஊழலுக்கு எதிராகப் போராடுவேன். இது நமது சந்ததியினரின் எதிர்காலத்துக்காகனது" என்று கீர்த்தி ஆசாத் கூறினார்.
என்னை யாரும் மிரட்ட முடியாது: கீர்த்தி ஆசாத்
Reviewed by நமதூர் செய்திகள்
on
00:04:00
Rating:
No comments: