தெருவை சுத்தம் செய்த ஆம் ஆத்மி கட்சியினர்!

புதுடெல்லி (31 ஜன 16): டெல்லி மாநகராட்சியில் 1.50 லட்சம் பேர் பணியாற்றி வருகிறார்கள்.
இவர்களுக்கு கடந்த 3 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. இதனைக் கண்டித்து 1.50 லட்சம் ஊழியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், துப்புரவு தொழிலாளர்களும் வேலை செய்வதை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் டெல்லி மாநகராட்சி பகுதியில் குப்பைகள் ஆங்காங்கே குவிந்துள்ளது. தெரு முனைகளில் குப்பைகள் அதிகம் தேங்கி கிடப்பதால் துர்நாற்றம் வீசத் தொடங்கியுள்ளது.

குப்பை அள்ளும் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக பொதுப்பணித்துறை ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களுடன் சேர்ந்து குப்பைகளை அகற்ற ஆம் ஆத்மி கட்சி தொண்டர்களும் ஈடுபட வேண்டுமென்று முதலமைச்சர் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்தார். இதை ஏற்று ஆம் ஆத்மி அமைச்சர் கபில்மிஸ்ரா இன்று குப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டு துடைப்பம் பிடித்து தெருக்களில் பெருக்கவும் செய்துள்ளார்.
மாநகராட்சி ஊழியர்களுக்கு மாநில அரசுதான் ஊதியம் வழங்க வேண்டும். ஆனால், கெஜ்ரிவால் அவர்களுக்கு 3 மாதமாக ஊதியம் கொடுக்கவில்லை. இதனால் கெஜ்ரிவால் வீடு முன்பு மாநகராட்சி ஊழியர்கள் தினமும் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
தெருவை சுத்தம் செய்த ஆம் ஆத்மி கட்சியினர்! தெருவை சுத்தம் செய்த ஆம் ஆத்மி கட்சியினர்! Reviewed by நமதூர் செய்திகள் on 22:41:00 Rating: 5

No comments:

Powered by Blogger.