தலித்‬ மாணவர் தற்கொலை – SDPI தடையை மீறி போராட்டம்


தலித்‬ மாணவர் ரோஹித் வெமுலா  தற்கொலைக்கு தள்ளப்பட்டது குறித்து மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சரை கண்டித்து தடையை மீறி‪‎SDPI‬போராட்டம் நடத்தியது.

ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்த மாணவர் ரோஹித் வெமுலா. இவர் ஹைதராபாத் பல்கலைகழகத்தில் அறிவியல் தொழில்நுட்பத் துறையில் ஆராய்ச்சி படிப்பு படித்துக் கொண்டிருந்தார். மேலும் இவர் அம்பேத்கர் மாணவர் அமைப்பைச் சேர்ந்த நிர்வாகி ஆவார்.


மத்தியில் பாஜக ஆட்சி அமைந்த நாள் பல்வேறு கல்வி நிலையங்களில், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மாணவர் அமைப்பான ஏபிவிபி மற்றும் சங்பரிவார் அமைப்புகள் வகுப்புவாத பிரச்சனைகளில் ஈடுபடுவதும், இந்துத்துவா அஜண்டாக்களை திணிப்பதும் வழக்கமாகி வருகின்றது. அந்த வகையில், ஐதராபாத் பல்கலைகழகத்திலும் ஏபிவிபி வகுப்புவாத நடவடிக்கையில் ஈடுபட்டபோது பல்கலைகழக மாணவர்களுக்கும் ஏபிவிபி குண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்ப்பட்டது. இதையடுத்து ஏபிவிபியின் வகுப்புவாத செயல்பாடுகளை கட்டுப்படுத்த வேண்டும் என்று அம்பேத்கர் மாணர் அமைப்பை சேர்ந்தவர்கள் மற்றும் பல்கலைகழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆனால், பல்கலைகழக நிர்வாகிகளோ பாஜக மத்திய அமைச்சர் பண்டாரூ தத்தாத்ரேயா மற்றும் மத்திய மனிதவள மேபாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிரிதி இராணி ஆகியோர் ஏற்ப்படுத்திய நிர்பந்தம் காரணமாக, அம்பேத்கர் மாணவர் அமைப்பை முடக்கும் வகையில் ரோஹித் வெமுலா, உட்பட ஐந்து தலித் மாணவர்களை இடைநீக்கம் செய்துள்ளது. அதோடு விடுதி, உணவு, நூலகம் உள்ளிட்ட பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட எதையும் இம்மாணவர்கள் பயன்படுத்த தடை விதித்தது.

இதனைக் கண்டித்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் தொடர்ந்து போராடி வந்தனர். இந்நிலையில், சமூக புறக்கணிப்பாலும், பல்கலைகழகத்தின்  தொடர் நெருக்கடியாலும் மன உளைச்சலுக்கு ஆளான ரோஹித் விடுதி அறை ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
தலித் மாணவர் தற்கொலையை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகள் தலித் மக்கள் மீது கொண்டுள்ள வன்மத்துக்கான சாட்சி. பாஜகவின் மத்திய அமைச்சர்களே இதற்கு ஆதரவாக செயல்பட்டிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

இந்நிலையில் தலித் மாணவர் தற்கொலைக்கு காரணமான பாஜக மத்திய அமைச்சர்கள் மற்றும் பல்கலைகழக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், நீதி விசாரணை வேண்டும் என்பதை வலியுறுத்தி SDPI கட்சி இன்று (ஜன.19) பாராளுமன்ற சாலையில் அமைந்துள்ள மனித வளத்துறை அமைச்சகத்தை முற்றுகையிட்டு தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க போலீசார் தண்ணீரை பீச்சி அடித்தனர். இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு மாணவர் அமைப்பை சேர்ந்த மாணவர்களும் கலந்துகொண்டனர்
தலித்‬ மாணவர் தற்கொலை – SDPI தடையை மீறி போராட்டம் தலித்‬ மாணவர் தற்கொலை – SDPI தடையை மீறி போராட்டம் Reviewed by நமதூர் செய்திகள் on 23:50:00 Rating: 5

No comments:

Powered by Blogger.