காஷ்மீரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்: துருக்கி அதிபர்!
துருக்கி அதிபர் தாயீப் எர்துவான், “இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கு இடையிலான பிரச்னை காரணமாக காஷ்மீர் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று கூறியிருக்கிறார். இந்தியா - பாகிஸ்தான் பிரச்னையை இனியும் புறக்கணிக்க முடியாது என்ற எர்துவான், இரண்டு நாடுகளும் இப்பிரச்னையை பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். நேற்று பாகிஸ்தானுக்கு வந்த எர்துவான், அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீப் உடன் உரையாடிய பிறகு இக்கருத்தை தெரிவித்து இருக்கிறார்.
“இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைக்கோட்டில் உருவாகியிருக்கும் பதற்ற நிலை காரணமாக, நம் சகோதர சகோதரிகள் துயர் அடைகின்றனர். இதை இனி புறக்கணிக்க முடியாது. இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை நடத்தி இதை முடிவு கொண்டு வர வேண்டும்” என்றார். துருக்கியில் நடந்த ராணுவப் புரட்சி பற்றி பேசிய அவர், துருக்கியில் ராணுவப் புரட்சிக்குப் பிறகு தேர்வு செய்யப்பட்ட அரசுக்கு ஆதரவு அளித்ததற்காக பாகிஸ்தானுக்கு நன்றி கூறிய எர்துவான், “துருக்கியில் ராணுவப் புரட்சி தோற்ற பிறகு, பாகிஸ்தான் அதிபர் மம்னூன் ஹுசைன் என்னை அழைத்தார். நாங்கள் வளர்ச்சி குறித்து ஆலோசித்தோம்” என்று கூறினார்.
காஷ்மீரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்: துருக்கி அதிபர்!
Reviewed by நமதூர் செய்திகள்
on
23:42:00
Rating:
No comments: