மோடியின் 'சாதனைகள்' எனும் மோசடி
மோடியின் ஆட்சியையும் அவரது சாதனையும் என்று ஆதாரமில்லாமல் ஆடிட்டர் என்ற பெயரில் வலம்வரும் முகமூடி பதிவிற்கான மறுப்பு
மோடியின் மாய வித்தைகளைக் கண்டு ஏமாறுபவர்களைப் பார்க்கும் போது நமக்கு பரிதாபம் தான் வருகிறது. தனது மாயாஜால பழைய வித்தைகள் எல்லாம் வெளுத்துவிட்ட பிறகு, கையில் எடுத்துள்ள திட்டமே இந்த DEMONITISE ON MONEY என்ற திட்டம். இதுவும் எப்படி ஏமாற்றுகிறது என்பதனை பிறகு பார்க்கலாம். அதற்கு முன் பா.ஜ.வின் சில சாதனைகளைப் பார்த்து விடுவோம்.
பாஜக குண்டு உருவாக்குவதில் சாதனை படைத்த போது சில..
1) கேரளா கன்னூரில் பாஜக தொண்டர் குண்டு தயாரிக்கும் பொழுது குண்டுவெடித்து இறந்தார். ஆதாரம் : IndiaToday.in 20.08.2016
2) கான்பூரில் குண்டு வெடித்து ஆர்.எஸ்.எஸ் உடைய இருவர் பலி. சம்பவ இடத்தில் குண்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் இரசாயனப் பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டது. ஆதாரம்: 24.08.2008. DNA India.
3) மத்தியப் பிரதேசத்திலுள்ள கண்டவா என்ற இடத்தில் பாஜக தலைவர் ஒருவருடைய தோழரின் வீட்டின் பின்புறத்தில் 276ற்கும் மேற்பட்ட ஜெலட்டீன் குண்டுகள் கைப்பற்றப்பட்டது. ஆதாரம்: 19.09.2015 Hindustan Times.
4) கேரளாவில் குண்டு தயாரிக்க முற்பட்டபொழுது, RSS ஒருவர் பயங்கரமான காயங்களுக்கு உள்ளானார். ஆதாரம்: 12.09.2014 TwoCircles
5) குண்டு தயாரிக்கும் போது கன்னூரில் இருவர் குண்டுவெடிப்பில் இறந்தனர். இவர்கள் பாஜக தொண்டர்கள். ஆதாரம்:11.11.2008 The Hindu.
6) ஆயுதங்களைத் தூக்குங்கள். பஜ்ரங்தாலின்(பா.ஜ.க வின் தலித் அமைப்பு) பயங்கரவாதம். ஆதாரம்: 15.09.2008. Outlook Magazine.
கலாச்சாரத்தைப் பாதுகாக்க பாஜக பாடுபட்ட போது சில..
1) பலாத்காரத்தை தடுக்க முடியாது எனக் கூறிய பா.ஜ.க மத்திய அமைச்சர் பாபுலால் கவுர். ஆதாரம்: 06-06-2104
2) வெளிநாட்டு அழகிகளுக்காக ராணுவ ரகசியத்தை வெளியிட்டார் பாஜகவின் வருண் காந்தி.
3) பொது இடத்தில் லிப் டூ லிப் முத்தம் கொடுத்துக் கொண்ட பாஜக பெண் அமைச்சர்கள். ஆதாரம்: நக்கீரன் 20-12-06
4) உன்னை பலாத்காரம் செய்தால் நாங்கள் என்ன செய்ய முடியும் என்று செய்தியாளர்களைப் பார்த்து கேள்வி எழுப்பிய பாஜகவின் சட்டப்பேரவை அமைச்சர் ஈஸ்வரப்பா. ஆதாரம்: தினமலர் 18-10-2016
5) கர்நாடக பாஜக எம்.எல்.ஏ ரேணுகாச்சார்யா நர்ஸ் உடன் உல்லாசமாக இருந்த போட்டோக்கள் வெளிவந்தன. நர்ஸ், எம்.எல்.ஏ ஏமாற்றியதாக புகார். ஆதாரம்: தினமலர் 24-12-2009
6) சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் சிவசேனா தலைவர் கைது. ஆதாரம்: 07-09-2014 தி ஹிந்து.
7) இளம்பெண் பாலியல் பலாத்காரம் பாஜக எம்.எல்.ஏ மீது வழக்கு பதிவு. ஆதாரம்: தி இந்து 09-11-2013
இந்தியாவை முன்னேற்ற பாஜக பாடுபட்ட போது சில...
1) ஹிந்துத்துவா அமைப்புகள் இந்தியாவின் குடியரசு தினத்தை கருப்பு தினமாகக் கொண்டாடின. ஆதாரம்: The Hindu 28-01-2016
2) காந்தி கொல்லப்பட்ட தினத்தை கொண்டாட்ட நாளாகக் கொண்டாடிய ஹிந்து மகாசபா. ஆதாரம்: The Hindu 30-01-2016
3) ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதம் – ஆர்.எஸ்.எஸ் பெரும் தலைவர் அசீமானந்தாவின் ஒப்புதல் வாக்குமூலம். பல இடங்களில் முஸ்லிம்களின் பெயரில் நாங்கள் தாக்குதல் நடத்தியுள்ளோம். பல இடங்களில் தொடர்ச்சியாக குண்டு வெடிப்பதற்கான பயிற்சியையும் நடத்தி வருகிறோம் என்ற பல கூற்றுக்கள் அடங்கிய வாக்குமூலம் ஆதாரம்: கேரவான் புத்தகம், லீனா கீதா ரகுநாத்
4) 77 வயதான எழுத்தாளர் கல்புர்கி இந்துத்துவவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். ஆதாரம்: 12-10-2015
5) உத்திரப் பிரதேசம் ஹாசிம்புரா மற்றும் மலியானா கிராமங்களில் இந்துத்துவவாதிகளால் 73 பேர் சுட்டும் எரித்தும் கொல்லப்பட்டனர். ஆதாரம்: புதிய ஜனநாயகம் மே,2015
6) இந்தியாவில் விவசாயிகள் தற்கொலை செய்வது பேஷனாகிவிட்டது – பாஜக மத்திய அமைச்சர். ஆதரம்: 18-02-2016 தி ஹிந்து.
7) கருப்புப் பணம் வெளியாகும் இடங்களில் நான்காவது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம். ஆதாரம்: தி ஹிந்து 09-12-2015
இன்னும் பாஜகவின் சாதனைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதால் முடிவை நடுநிலையுடன் நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள் என்று முடித்துக் கொள்கிறேன்.
ஊழல்களை பட்டியல் போட்டால் ஏடு தாங்காது என்பதால் தவிர்க்கிறேன். இருந்தும் வியாபம் ஊழல், குஜராத்தில் பாஜக எம்.எல்.ஏ கல்விக்காக வழங்கப்பட்ட பணத்தில் செய்த ஊழல். அருண் ஷோரியின் ஊழல், சவப்பெட்டி ஊழல் என பா.ஜ.க சாதித்த ஊழல்கள் மிக அதிகம். மோடியின் ஆட்சிக் காலங்களில் வெளிவந்த ஊழல்களான வியாபம் ஊழல், குஜராத் அரசின் ஊழல்கள் முக்கியத்துவம் நிறைந்தவைகள்.
மோடியின் அரசியல் நகர்வுகளை கவனிப்பார் யாரும் எளிதாகப் புரிந்து கொள்ளலாம். 2014 தேர்தலின் போது மோடி பேசுகையில் "விவசாயிகள் காங்கிரஸ் ஆட்சியில் தங்கள் நிலம் எப்போது அபகரிக்கப்படுமோ என்ற பயத்தில் இருக்கிறார்கள். மேலும், நான் டீ விற்று வளர்ந்தவன். காங்கிரஸ் கட்சியினரைப் போல பகட்டான ஆடை உடுத்துபவனல்ல" என்றார். (ஆதாரம்: தி இந்து 08-04-2014) ஆனால் தான் ஆட்சிக்கு வந்ததும் விவசாயிகளுக்கு எதிரான அதே நில அபகரிப்பு சட்டத்தை பல மசோதக்களில் நிறைவேற்றி நடைமுறைக்கு கொண்டு வர முனைந்தார். டீ விற்று வளந்தவர் 15 லட்சத்திற்கு கோர்ட்டு மட்டும் போட்டுக் கொண்டு சுற்றினார். இப்படி அரசியலில் பல சாதனை செய்தவர் மோடி.
இந்த ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் பிரச்சனையில் ஏற்பட்ட குழப்பங்களுக்கு பதிலளிக்கையில் "காங்கிரஸ் 25 பைசாவை தடை செய்த போது கேள்வி கேட்காதவர்கள் இன்று ஏன் கேட்கிறார்கள் " என்று மக்களை முட்டாளாக்கும் பதில்களை சொன்னார். இது தான் மோடி!. இவ்வளவு தான் மோடி!.
மூன்று நாட்களில் நெட் ரீஜார்ஜ் செய்யாமல் விட்டால், மூன்று நாட்களில் உணவு உண்ணாமல் போனால், மூன்று நாட்கள் நடைமுறை வாழ்க்கையில் பிரச்சன வந்தால் என்ன?. என்று கேட்கும் மோடி ஆதரவாளர்களே.. இதுவரை இப்பிரச்சனையால் மட்டும் 55 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களது உயிர்களுக்கான பதில் என்ன?.. இந்த உயிர்களினால் கருப்புப் பணம் மீண்டுவிடுமா?
கருப்புப் பணம் வைத்திருக்கும் பண முதலைகளும் கார்ப்பரேட்டுகளும் இத்திட்டத்திற்கு ஆதரிக்கிறார்கள். ஆனால் சாமானியர்கள் எதிர்க்கிறார்கள் என்றால் இது யாரை பாதிக்கும் திட்டம்?.. எந்த கம்பெனி ஓனரும் கவுன்சிலர் உட்பட எந்த அரசியல்வாதியும், கார்ப்பரேட்களும் கியூவில் வந்து நிற்கவில்லை. இத்திட்டம் சாமானியர்களை பாதித்தது. சாமானியர்களை மட்டுமே பாதிக்கப் போகிறது.
- அபூ சித்திக்
மோடியின் 'சாதனைகள்' எனும் மோசடி
Reviewed by நமதூர் செய்திகள்
on
23:12:00
Rating:
No comments: