ரொக்கம் கிடையாது:முற்றுகைக்குள் வங்கிகள்!
அரசு ஊழியர்களுக்கான மாதச் சம்பளத் தொகையையும், ஓய்வூதியதாரர்களுக்கு பென்சன் தொகையையும் வழக்கம் போல வங்கி கணக்கில் செலுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.இதனால் நாளை முதல் வங்கிகள் மற்றும் ஏ.டி.எம் மையங்களில் கடும் கூட்ட நெரிசல் ஏற்படும் சூழல் உருவாகியிருக்கிறது. அரசு ஊழியர்களுக்கான மாதச் சம்பளத் தொகையையும், ஓய்வூதியதாரர்களுக்கு பென்சன் தொகையையும் வழக்கம் போல வங்கிக் கணக்கில் செலுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
பணப் பிரச்னை தொடர்பாக நாடு முழுவதும் வங்கியில், ஏடிஎம்-களில் பணம் எடுக்க மக்கள் அவதியடைந்து வந்தனர். இந்நிலையில், நாளை 1ஆம் தேதி பிறக்கும் வேளையில், அரசு ஊழியர்கள் அனைவருக்கும் இன்றே சம்பளத் தொகை வங்கிக் கணக்கில் பதிவு செய்யப்படும்போது இன்று இரவிலிருந்தே முழுப் பணத்தையும் எடுக்க முடியுமா என்று அரசு ஊழியர்களும், ஒருசில தனியார் ஊழியர்களும் தவித்து வருகின்றனர்.தமிழகத்தில் 14 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சி அமைப்பு ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். 1 லட்சம் தொகுப்பூதியதாரர்களும், 7 லட்சம் ஓய்வூதியதாரர்களும் உள்ளனர். இவர்களுடைய வங்கிக் கணக்கில் மாதம்தோறும் 30ஆம் தேதி பணம் செலுத்தப்பட்டு வருகிறது. அதேபோன்று, இந்த மாதமும் வங்கிக் கணக்கில் பணம் செலுத்துவதற்கு தமிழக அரசு முடிவுசெய்துள்ளது. அன்றைய தினமே அவர்கள் பணத்தை எடுத்துக்கொள்ளலாம்.
இதுகுறித்து என்ஜிஓ சங்கத் தலைவர் சண்முகராஜா கூறியதாவது:-
வங்கிக் கணக்கு மூலம் அரசு ஊழியர்களுக்கு சம்பளத் தொகையும், ஓய்வூதியதாரர்களுக்கு பென்சன் தொகையும் வழக்கம்போல் வங்கிக் கணக்கு மூலம் 30ஆம் தேதி வழங்கப்பட உள்ளது. வங்கிகளில் ஒரு வாரத்துக்கு 24 ஆயிரம் ரூபாய் மட்டுமே பணம் எடுக்க முடியும் என்று கட்டுப்பாடு உள்ளது. இதை தளர்த்தினால் மட்டுமே ஒட்டுமொத்த தொகையையும் எடுக்க முடியும்.
அரசு ஊழியர்கள் மாதத் தொடக்கத்தில் வீட்டு வாடகை, மளிகைச் செலவு, பால் செலவு போன்ற குடும்பச் செலவுகளை மேற்கொள்ள வேண்டி உள்ளது. எனவே, அரசு ஊழியர்களுக்கு ஒட்டுமொத்த சம்பளத் தொகையையும் ரிசர்வ் வங்கி வழங்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிலையில், அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு மட்டும் சம்பளத் தொகையில், ரூ. 3௦௦௦ ரொக்கமாக வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிய வருகிறது. இதுகுறித்து, அரசு போக்குவரத்து தொழிற்சங்க பிரமுகர்களிடம் கேட்டபோது, பணப் பிரச்னை தொடர்பாக நவம்பர், டிசம்பர் மாத சம்பளத்தொகையை ரொக்கமாக வழங்கும்படி அரசிடம் ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்தோம். வங்கிகளின் அறிவிப்புக்கேற்ப ரொக்கத்தொகை வழங்குவதாக அரசு தரப்பில் உறுதி தெரிவிக்கப்பட்டது.
தற்போதைய சூழ்நிலையில், நேற்று 29ஆம் தேதி முதல் வங்கியில் இருந்து பணம் எடுப்பதற்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகள் அனைத்தும் தளர்த்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. அதையடுத்து, அவசரத் தேவைக்காக மட்டும் ரூ. 3௦௦௦ ரொக்கமாக வழங்கப்படும் என்று கூறப்பட்டது. இருப்பினும், நாங்கள் குறைந்தபட்சம் ரூ. 5௦௦௦ஆவது ரொக்கமாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம் என்று தகவல் தெரிவித்தனர்.
ரொக்கம் கிடையாது:முற்றுகைக்குள் வங்கிகள்!
Reviewed by நமதூர் செய்திகள்
on
06:42:00
Rating:
No comments: