அனுமதி மறுப்பு: ஏ.கே அந்தோணி கண்டனம்!
மாரடைப்பு காரணமாக ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கேரள மாநிலத்தைச் சேர்ந்த எம்.பி.யும், முன்னாள் மத்திய அமைச்சருமான இ.அகமதை, அவரது குடும்பத்தினர் காண அனுமதி அளிக்காத மருத்துவமனை அதிகாரிகளின் செயல் கொடூரமானது என்று முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி விமர்சித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் நேற்றுமுன்தினம் ஜன.31ஆம் தேதி செவ்வாய்க்கிழமை உரை நிகழ்த்தினார். அப்போது அங்கிருந்த கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த எம்.பி. அகமது திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து ஆர்எம்எல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சைப் பலனின்றி நேற்று புதன்கிழமை அதிகாலை உயிரிழந்தார். இந்நிலையில், அகமதுக்கு அஞ்சலி செலுத்திய காங்கிரஸ் மூத்த தலைவரும், பாதுகாப்புத் துறை முன்னாள் அமைச்சருமான ஏ.கே.அந்தோணி, பின்னர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:-
மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள அகமதை காண்பதற்கு, அவரது குடும்பத்தினருக்கு ஆர்எம்எல் மருத்துவமனை அதிகாரிகள் அனுமதி அளிக்கவில்லை. அத்துடன், அவரது உடல்நிலை குறித்த தகவல்களையும் தெரிவிக்கவில்லை. மேலும், அங்கு சென்ற காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும், அகமதை காண்பதற்கு அவர்கள் அனுமதிக்கவில்லை. உடல் நலக் குறைவுடன் இருக்கும் சோனியா காந்தி, சுமார் 2 மணி நேரம் அங்கு காத்திருந்தார். ஆர்எம்எல் அதிகாரிகளின் கொடூரமான இந்தச் செயல் வலியைத் தருகிறது என்று ஏ.கே.அந்தோணி கூறினார்.
அனுமதி மறுப்பு: ஏ.கே அந்தோணி கண்டனம்!
Reviewed by நமதூர் செய்திகள்
on
23:38:00
Rating:
No comments: