டிரம்ப் வரவு மோசமானது: ஈரான் அதிபர் !
அமெரிக்க அதிபரின் சமீபத்திய நடவடிக்கைகளை விமர்சித்துள்ள ஈரான் அதிபர் ஹாசன் ருஹானி, அரசியலுக்கு மோசமான புதுவரவாக டிரம்ப் இருக்கிறார் என கருத்து தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபராக சமீபத்தில் பொறுப்பேற்ற டொனால்டு டிரம்ப், அதிரடி நடவடிக்கையாக ஈரான், சிரியா உள்ளிட்ட 7 முஸ்லீம் நாடுகளில் உள்ள குடிமக்களுக்கு அமெரிக்க விசாவை தடை செய்தார். இதற்கு பதிலடியாக ஈரான் நாட்டில் நுழைவதற்கு அமெரிக்கர்களுக்கு தடை விதித்தது ஈரான் அரசு.
இந்நிலையில், டிரம்ப் நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள ஈரான் அதிபர் ஹசன் ருஹானி, “ட்ரம்ப் இவ்வளவு காலம் வேறு உலகில் வசித்துவிட்டு இப்போதுதான் அரசியல் உலகிற்குள் அடியெடுத்து வைக்கிறார். ஆனால், அவர் ஆபத்தான வரவாகத்தான் இருக்கிறார். டிரம்பின் நடவடிக்கைகள் அமெரிக்காவை மட்டும் தான் பாதிக்கும். மற்ற நாடுகள் நல்ல நிலையில் தான் இருக்கும். ஈரான் மக்களின் மத்தியில், அமெரிக்க அரசின் நிர்வாகம் டிரம்ப் நடவடிக்கைகளால் நேர்மையற்றதாக மாறிவிட்டது. அதனால் தான் அமெரிக்கர்களுக்கு ஈரானில் தடை விதிக்கப்பட்டது.” என தெரிவித்துள்ளார்.
அதையடுத்து, ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜவாத் ஜாரிப் கூறுகையில், , இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் 7 நாடுகளுக்கு தடைவிதிக்கும் டொனால்டு டிரம்ப் முடிவானது “பயங்கரவாதிகளுக்கு ஒரு மிகப்பெரிய பரிசாகும். ஒட்டுமொத்தமாக பாகுபாடு காட்டப்படுவது பயங்கரவாதிகள் ஆட்சேர்ப்புக்கு உதவியாக அமையும்,” என்று எச்சரித்தார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பயணிகளுக்கு விதித்துள்ள கட்டுப்பாடானது இருதரப்பு நட்புறவில் அடிப்படையின்மையை காட்டுகிறது என்றும் கூறினார்.
அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அந்நாட்டவர்களுக்கு விசா வழங்குவதில் கட்டுபாடு கொண்டுவரப்படும் என ஈரான் சபதமிட்டு உள்ளது. ஈரான் வருவதற்கு அமெரிக்கர்களுக்கு விசா வழங்கப்படாது என்ற தெக்ரான் முடிவானது, பதிலடி நடவடிக்கை கிடையாது. அதிகாரப்பூர்வ விசா பெற்றவர்கள் ஈரானுக்கு வரலாம் எனவும் ஜாரிப் கூறியுள்ளார்.
டிரம்ப் வரவு மோசமானது: ஈரான் அதிபர் !
Reviewed by நமதூர் செய்திகள்
on
23:41:00
Rating:
No comments: