தொழிற்துறை உற்பத்தி சரிவு!


பணமதிப்பழிப்பு நடவடிக்கை எதிரொலியாக கடந்த டிசம்பர் மாதத்தில் இந்தியாவின் தொழிற்துறை உற்பத்தி 0.4 சதவிகிதம் சரிவடைந்துள்ளது.
அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், டிசம்பர் மாதத்தில் இந்தியாவின் தொழிற்துறை உற்பத்தி குறியீடு 0.4 சதவிகிதம் குறைந்துள்ளது. முன்னதாக நவம்பர் மாதத்தில் இந்தியாவின் தொழிற்துறை உற்பத்தி 5.7 சதவிகிதமாக இருந்தது. மேலும், டிசம்பர் மாதத்தில் 1.2 சதவிகித வளர்ச்சி எட்டப்படும் என்று கணிக்கப்பட்டிருந்தது. ஆனால், பணமதிப்பழிப்பு அறிவிப்பின் விளைவாக டிசம்பர் மாதத்தில் நுகர்பொருள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் உற்பத்தி குறைந்து, ஒட்டுமொத்த தொழிற்துறை உற்பத்தி சரிவைச் சந்தித்துள்ளது.
எனினும், நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் - டிசம்பர் வரையிலான ஒன்பது மாதங்களில் இந்தியாவின் ஒட்டுமொத்த தொழிற்துறை உற்பத்தி 0.3 சதவிகிதம் உயர்ந்துள்ளது. அதேநேரம், கடந்த 2015ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் தொழிற்துறை உற்பத்தி குறியீடு 3.2 சதவிகிதம் வளர்ச்சியை எட்டியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. டிசம்பர் மாதத்தில், கம்பளி விரிப்பான்கள் உற்பத்தி 51.3 சதவிகிதமும், மூன்றுசக்கர வாகன உற்பத்தி 43 சதவிகிதமும், ஸ்கூட்டர்கள் உற்பத்தி 26 சதவிகிதமும், மோட்டார் சைக்கிள் உற்பத்தி 24 சதவிகிதமும் சரிவடைந்துள்ளது.
தொழிற்துறை உற்பத்தி சரிவு! தொழிற்துறை உற்பத்தி சரிவு! Reviewed by நமதூர் செய்திகள் on 02:55:00 Rating: 5

No comments:

Powered by Blogger.