மோடியே எங்களுக்கு வாக்களிப்பார் : அகிலேஷ் யாதவ்
ஆக்ரா- லக்னோ விரைவு பாதையில் ஒரு முறை பயணித்தால் பிரதமரே எங்களுக்கு வாக்களிப்பார் எனத் தெரிவித்திருக்கிறார் அகிலேஷ் யாதவ்.
இண்டியா டுடே பத்திரிக்கைக்கு பிரத்யேகமாக பேட்டியளித்த அகிலேஷ் யாதவ் பிரதமரின் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளித்திருக்கிறார். “உத்திர பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமைகளும், கலகங்களும் அதிகம் நிகழ்வதாக பிரதமர் தெரிவித்திருக்கிறார். கலகம் என்றால் என்ன? இரண்டு இனங்களுக்கு இடையே நடக்கும் சண்டையை தான் கலகம் என்கின்றார்கள். இரண்டரை வருடங்களாக நீங்கள் மத்தியில் ஆட்சியில் இருக்கின்றீர்களே உத்திர பிரதேசத்தில் சட்ட ஒழுங்கை முறை படுத்த என்ன செய்தீர்கள்? முந்தைய அரசு காவல் துறைக்கு பணம் அளித்தது. தற்போதைய அரசு அதை நிறுத்தி விட்டது. ஆக்ரா - லக்னோ விரைவு சாலையில் பிரதமர் ஒரு முறை பயணித்தால், அவரும் சமாஜ்வாதிக்கு வாக்களிப்பார்.
மெடண்டா மருத்துவமனையில் யாரும் ரத்த அழுத்தம் சோதனை செய்து கொள்ள முடியாது என பிரதமர் கூறியிருக்கிறார். தனியார் மருத்துவமனைகளுக்கு நிலம் மட்டுமே கொடுக்கப்படும், அவர்களே தான் மருத்துவமனைகள் எழுப்பினர். சமாஜ்வாதி அரசு சில மருத்துவக் கல்லூரிகள் கட்டி எழுப்பியிருக்கின்றது. பிரதமர் அங்கே சென்று தன் ரத்த அழுத்தத்தை சோதித்துக் கொள்ளலாம். தேர்தல் முடிந்த பிறகு அத்தனை பாஜக தலைவர்களும் தங்கள் ரத்த அழுத்தத்தை சோதித்துக் கொள்ள வேண்டியிருக்கும். மெட்ரோ தொடங்கி எல்லோரும் அதில் பயணிக்கத் தொடங்கும் போது, நிச்சயமாக பிரதமரை அழைப்போம்” என்று அகிலேஷ் யாதவ் பேசியிருக்கிறார்.
மோடியே எங்களுக்கு வாக்களிப்பார் : அகிலேஷ் யாதவ்
Reviewed by நமதூர் செய்திகள்
on
03:19:00
Rating:
No comments: