இந்தியாவில் அதிகரிக்கும் மனநலக் கோளாறு!
நாட்டில் குடும்ப வறுமை, மன அழுத்தம் மற்றும் வேலையின்மை போன்ற காரணங்களால் தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், சர்வதேச அளவில் இந்தியாவில்தான் அதிகளவில் மன அழுத்த நோயும், தற்கொலைகளும் நடக்கின்றன என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், 2015ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 5 கோடிப்பேர் மன அழுத்தத்தாலும் 3 கோடிப்பேர் மனநலக் கோளாறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகம் முழுவதும் சுமார் 32 கோடிக்கும் அதிகமானோர் மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வசித்து வருபவர்கள்தான் அதிகளவில் இந்த நோயால் பாதிக்கின்றனர். இந்தியா, சீனா போன்ற மக்கள் தொகை அதிகமுள்ள நாடுகளில் இந்த எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
குறிப்பாக, 15 வயது முதல் 29 வயதுடையவர்களே அதிகளவில் தற்கொலை செய்துகொள்கின்றனர். மேலும் மன அழுத்த நோயால் ஆண்களைவிட பெண்கள்தான் அதிகளவில் பாதிப்படைகின்றனர்.
இந்தியாவில் 2015ஆம் ஆண்டில் 7,88,000 லட்சம்பேர் தற்கொலை செய்துள்ளனர். உலகம் முழுவதும் 2005ஆம் ஆண்டு முதல் 2015 வரை மன அழுத்த நோயால் 18.4% பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சர்வதேச அளவில் 40 விநாடிகளுக்கு ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறார் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்தியாவில் அதிகரிக்கும் மனநலக் கோளாறு!
Reviewed by நமதூர் செய்திகள்
on
23:59:00
Rating:
No comments: