150 ஆண்டுகளுக்கு பின் தோன்றும் ப்ளூ சூப்பர்மூன் சந்திர கிரகணம்!

eclipse
150 ஆண்டுகளுக்கு பின்னர் வரும் 31ஆம் தேதி, ப்ளூ சூப்பர்மூன் சந்திர கிரகணம் தோன்றவுள்ளது. சந்திரன் பூமிக்கு மிக அருகில் உள்ள அதன் சுற்றுவட்டப் பாதையில் நிலை கொண்டிருக்கும்.

சந்திர கிரகணம் அதன் திசையில்  நீளவட்ட சுற்றுப்பாதையில் பூமிக்கு நெருக்கமாக வரும். சந்திரனின் கீழ் விளிம்பு பிரகாசமாகவும், மேல் விளிம்பு இருளாகவும் காணப்படும். இதனால் மற்ற நேரங்களை விட, சந்திரன் மிகப் பெரிதாக காணப்படும். இந்த ப்ளூ மூன் சந்திர கிரகணம் மொத்தம் 77 நிமிடங்கள் நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பசுபிக் பெருங்கடலில் கொந்தளிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. உலகெங்கிலும் உள்ள அமெச்சூர் மற்றும் வானியலாளர்களால்(Astronomers) மிகவும் பிரபலமாகக் கருதப்படும் பிரபலமான வானியல் நிகழ்வு இது.
 
இந்த கிரகணம் மத்திய மற்றும் கிழக்கு ஆசியா, இந்தோனேசியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் மாலை நேரத்தில் தெரியும். முன்னதாக 1886ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி, ப்ளூ சூப்பர்மூன் சந்திர கிரகணம் தோன்றியது குறிப்பிடத்தக்கது.
150 ஆண்டுகளுக்கு பின் தோன்றும் ப்ளூ சூப்பர்மூன் சந்திர கிரகணம்! 150 ஆண்டுகளுக்கு பின் தோன்றும் ப்ளூ சூப்பர்மூன் சந்திர கிரகணம்! Reviewed by நமதூர் செய்திகள் on 03:09:00 Rating: 5

No comments:

Powered by Blogger.