லெட்டர் பேடாக மாறும் செல்லாத ரூபாய் நோட்டுகள்!
பண மதிப்பழிப்பு நடவடிக்கையால் மதிப்பு இழந்த ரூபாய் நோட்டுகளை லெட்டர் பேடுகளாக மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மத்திய அரசு 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளைச் செல்லாது என்று அறிவித்தது. அதற்குப் பதிலாக, புதிய 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் வெளியாகின.
பழைய ரூபாய் 500 மற்றும் ரூபாய் 1000 நோட்டுகளை வங்கிகள் சேகரித்து, டன் கணக்கில் பல்வேறு அரசு கட்டடங்களில் முட்டையில் இருக்கிறது. கழிவுகளைத் திறம்பட நிர்வகிப்பதற்கு, மத்திய அரசு புதிய திட்டத்துடன் வந்தது. ரூபாய் நோட்டுகளை அரைத்து காகிதக் கூழாக்கி லெட்டர் பேட் தயாரிக்க மத்திய அரசு முடிவு செய்தது. இந்தக் காகிதக் கூழ்களை நாடு முழுவதும் உள்ள சிறைகளுக்கு அனுப்பி, கைதிகளைக் கொண்டு லெட்டர் பேடு தயாரிக்கும் பணிகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி, சென்னை புழல் சிறைக்குக் கொண்டுவரப்பட்டுள்ள காகிதக் கூழ் மூலம் லெட்டர் பேடு தயாரிக்க நிபுணர்கள் மூலம் கைதிகளுக்கு பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது. புழல் சிறைக்கு 36 டன் காகிதக் கூழ் வந்துள்ளது. இந்திய கரன்ஸி காட்டனால் உருவாக்கப்பட்டது. தற்போது, கைதிகளால் உருவாக்கப்பட்ட லெட்டர் பேடுகளை பயன்படுத்தி வரும் அனைத்து அலுவலங்களும், கைதிகளின் வேலையைப் பாராட்டி வருகின்றன எனச் சிறைத்துறை ஐ.ஜி. முருகேசன் கூறினார். மேலும், இவை அனைத்தும் அரசு துறைகளுக்குள்ளே விற்கப்படுகிறது. இதுமட்டுமல்லாமல், காய்கறி வேளாண்மை, முயல் வளர்ப்பு, ஷூ பாலிஷ் தயாரித்தல் ஆகிய முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனத் தெரிவித்துள்ளார்.
லெட்டர் பேடாக மாறும் செல்லாத ரூபாய் நோட்டுகள்!
Reviewed by நமதூர் செய்திகள்
on
02:59:00
Rating:
No comments: