கல்லூரிகளில் அரசியல் விவாதங்கள் நடத்தக்கூடாது!
கல்லூரிகளிலும் கல்வி நிறுவனங்களிலும் அரசியல் விவாதங்கள் நடத்த அனுமதிக்கக்கூடாது என கல்லூரிகளுக்கான கல்வி இயக்குநரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது தொடர்பாக கல்லூரி கல்விக்கான இயக்குநரகத்தின் இயக்குநர் ஜே.மஞ்சுளா தமிழகத்திலுள்ள அனைத்து கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
இந்த சுற்றறிக்கையில் ,அரசியல் சித்தாந்தங்களை பரப்புவதற்கு கல்லூரி வளாகங்களை பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கக்கூடாது. கல்லூரி வளாகங்களைப் பயன்படுத்தி அரசியல் கட்சிகள் தங்களது சித்தாந்தங்களை மாணவர்கள் மத்தியில் பரப்புகின்றன. இது போன்ற நிகழ்வுகள் மாணவர்களின் கல்வியை பாதிக்கின்றன, அவர்களின் ஆராய்ச்சி மனப்பான்மை பாதிக்கப்படுகிறது எனத் தெரிவித்துள்ளது.
மாணவர்கள் அரசியலில் ஈடுபடுவது பல்வேறு அரசியல் கொள்கைகளை தெரிந்து கொள்வதற்கே, அது அவர்களின் அறிவை விசாலமாக்கும், அவர்கள் சமூகத்திலுள்ள யதார்த்த நிலையைப் புரிந்து கொள்ள உதவும் என்று பல்கலை கழக ஆசிரியர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் கே.பாண்டியன் தெரிவித்துள்ளார் . மேலும் ,இது மாதிரி அரசியல் நிகழ்வுகளைத் தடை செய்வது மாணவர்களின் எதிர்காலத்தை முன்னேற்ற எந்தவிதத்திலும் பயன்படாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில செயலர் எஸ்.பாலா இந்த சுற்றறிக்கை யாரையோ திருப்திப்படுத்த அனுப்பப்பட்டுள்ளது. கல்வி வளாகங்களில் ஜனநாயக உரிமைகளே இல்லாத சூழ்நிலையில் இது போன்ற சுற்றறிக்கைகள் தமிழக மாணவர்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளைக்கூடப் பறித்து விடுகின்றன என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
கல்லூரிகளில் அரசியல் விவாதங்கள் நடத்தக்கூடாது!
Reviewed by நமதூர் செய்திகள்
on
00:37:00
Rating:
No comments: