முஸ்லிம்களின் வாக்குரிமையை பறிக்க வேண்டும் என்பதா? சிவசேனாவுக்கு கண்டனம்!


ஹைதராபாத்: முஸ்லிம்களின் வாக்கு உரிமையை பறிக்க வேண்டும் என்ற கட்டுரையை வெளியிட்ட சிவசேனா கட்சி இதழின் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒவைசி தெரிவித்துள்ளார்.

வாக்கு வங்கி அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் முஸ்லிம்களின் வாக்குரிமையை பறிக்கவேண்டும் என சிவசேனா தனது கட்சி பத்திரிகையான சாம்னாவில் தலையங்கம் வெளியிட்டு இருந்தது. 

சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் எழுதியுள்ள அந்த கட்டுரையில், இஸ்லாமிய சமுதாயத்தின் வாக்குகளை பெறுவதற்காக மதச்சார்பற்ற மற்றும் இந்துத்துவா இயக்கங்கள் நாடகமாடி வருவதால், அவர்களின் வாக்குரிமையை பறிக்க வேண்டும் என்றும், பால் தாக்கரேவும் இக்கருத்தையே கூறியதாகவும் குறிப்பிட்டிருந்தார். ராவத்தின் இந்த கருத்து கடும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.

சிவசேனாவின் இந்த கருத்திற்கு ஆல் இந்தியா மஸ்ஜிதே இத்தஹாதுல் முஸ்லிமீன் கட்சியின் தலைவரும், ஹைதராபாத் தொகுதி எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

எந்த ஒரு இந்தியனின் வாக்குரிமையையும் பறிக்கும்படி கூறுவதற்கு அவருக்கு உரிமை இல்லை என்று கூறிய ஒவைசி, இந்த விஷயத்தில் சிவசேனாவுடன் கூட்டணியில் உள்ள பாஜக  ஒதுங்கிக்கொள்ள முடியாது என்றும், சிவசேனா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.
முஸ்லிம்களின் வாக்குரிமையை பறிக்க வேண்டும் என்பதா? சிவசேனாவுக்கு கண்டனம்! முஸ்லிம்களின் வாக்குரிமையை பறிக்க வேண்டும் என்பதா? சிவசேனாவுக்கு கண்டனம்! Reviewed by நமதூர் செய்திகள் on 00:38:00 Rating: 5

No comments:

Powered by Blogger.