மாட்டிறைச்சியின் மறுபக்கம்.!

மோடியின் இந்துத்துவா கொள்கை ஆட்சியில் மாட்டிறைச்சிக்கு தடை, மாடுகளைக் கொல்லத் தடையால் பலப் பிரச்னைகள் உணடாகியுள்ளது. அந்த பட்டியலில் மருந்துப் பொருட்கள் விலை உயர்வும் இடம் பிடித்துள்ளது.
ஜெலட்டின் கேப்ஸ்யூல்கள், வைட்டமின் சத்து மாத்திரைகள் மருந்துப் பொருள்கள் மாட்டின் எலும்புகள், தோல், கால்நடைகளின் திசுக்கள் ஆகியவைகளிலிருந்து தயாரிக்கப்படுகின்றன.  இதனால் இப்பொருள்களின் விலைகளும் உயருகின்றன.
மாட்டிறைச்சிக்காகத் தடை கோரி போராடுபவர்கள் இந்த உண்மை தெரியும் போது சற்று கடினமாகவே இருக்கும். ஆனால், கால்நடைகள் கொல்லப்படுவது வெறும் இறைச்சி உண்பவர்களின் மகிழ்வுக்காக மட்டுமல்ல. மருந்து தயாரிக்கும் துறைகளிலும் பயன்படுத்துவதற்காக கால்நடைகள் கொல்லப்படுகின்றன.
மருந்துகளை ஜெலட்டின் கேப்ஸ்யூல்களில் (குப்பிகள்) அடைத்து வழங்குகிறார்கள். வைட்ட மின் சத்து மாத்திரைகள், கோழித் தீவனம் எலும்புகள், தோல் மற்றும் கால்நடைகளின் திசுக்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது.

மருந்து தயாரிக்கும் நிறுவனத்தின் மூத்த செயல்அலுவலராக உள்ள ஒருவர் கூறும் போது, சில வழிகளில் அல்லது மற்ற வழிகளில் நாம் எல்லோருமே நம்முடைய அன்றாட வாழ்வில் மாட்டிறைச்சியை எடுத்துக்கொள்கிறோம் என்று கூறினார். மாநில அரசு வழக்கு போட்டு விடும் என்கிற அச்சத்தால் தம் பெயரை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்தியாவில் பெரும்பாலான ஜெலட்டின் தயாரிக்கும் நிறுவனத்தினர் கூறும் போது,  மாட்டின் எலும்புகளைக் கொண்டுதான் ஜெலட்டின் தயாரிக்கிறோம் என்று கூறுகின்றனர். மகாராட்டிரம் மற்றும் அரியானா மாநிலங்களில் மாட்டிறைச்சித் தடையில் கடுமையான சட்டங்களின் மூலம் தடை போடப்பட்டுள்ளதால், வரும் நாள்களில் மருந்து தயாரிக்கும் நிறுவனங்களுக்கும் அச்சுறுத்தலாக இருப்பதாக அச்சத்தை வெளிப்படுத்துகின்றனர்.

எருமைகளின் எலும்புகளையே மருந்து நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன. எருமையின் எலும்பிலிருந்து கிடைக்கும் உறுதியான படிமங்களிலிருந்து எடுத்துக் கொள்கிறார்கள்.  ஆனால் இதில் உள்ள பிரச்சினை என்னவென்றால், அவைகளை எடுத்துச் செல்லும்போது, நேரடியாக எந்த மாட்டின் எலும்பிலிருந்து எடுக்கப்பட்டது என்பதை அது எருமை மாட்டிலிருந்து எடுக்கப்பட்டதா?  பசு மாட்டிலிருந்து எடுக்கப்பட்டதா? என்று யாரும் சாதாரணமாகக் கூறிவிடமுடியாது. 

ஆனாலும், இதில் எந்த வகை எலும்பு என்பதில் சிலர் ஏற்படுத்துகிற பிரச்சினை மருந்து உற்பத்தித் தொழிலில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறினார். பசுக்கொலை தடுப்புச் சட்டத்தை விரிவாக்கி எருது, வண்டி மாடுகளையும் மகாராட்டிரம் மற்றும் அரியானா அண்மையில் குற்றமாக்கி சட்டங்களை நிறைவேற்றியுள்ளன.  எருதைக் கொல்வதும் தற்போது தண்டனைக்குரியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மகாராட்டிரத்தில் அய்ந்து ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் அரியானாவில் பத்து ஆண்டுகள் சிறைத் தண்டனை என்று அறி விக்கப்பட்டுள்ளது. மாட்டிறைச்சியில் முக்கிய பங்கு வகிப்பவை எருமைமாடுகள்தான். இது வரையிலும் சட்டத்தின் படி தடை இல்லாமல் இருந்தது. 

இப்போது அதற்கும் தடை இல்லாவிட்டாலும், தண்டனைக்கு பயந்து ஏராளமான உணவு விடுதிகள், உணவகங்களில் மாட்டிறைச்சி உணவு வழங்குவதை நிறுத்திவிட்டனர்.  21 லட்சம் கால்நடைகள் பன்னாட்டு வேளாண் முறைமை நிறுவனத்தின் தகவலின்படி, இந்தியா உலகிலேயே கால்நடை களில் அதிக எண்ணிக்கை உள்ள நாடாக இருக்கிறது.  21 இலட்சம் கால்நடை எலும்புகள் தொழிற் சாலைகளில் பயன்படுத்தப்படுகின்றன என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதிக அளவிலான கால்நடைகளின் எண்ணிக்கை இருப்பதால் ஜெலட்டின் ஏற்றுமதியாளர்கள் முன்னணியில் உள்ளனர்.  மோடியின்  குஜராத்தில் இயங்கிவரும் நீட்டா தொழிற்சாலை தான் ஜெலட்டின் உற்பத்தியில் முக்கிய மய்யமாக உள்ளது.

கால்முட்டி வலிக்கு அளிக்கப்படும் புரோட்டின் துணைப்பொருள் கொலோஜென் பெப்டைட், ஜெலட்டினிலிருந்து உருவாக்கும் தொழில் தற்போது அபாயத்துக்குள்ளாகியுள்ளது.  ஜெலட்டின் உற்பத்தித் தொழிலில் ரூ.5,000 கோடி மதிப்பிலான ஜெலட்டினை வாங்குகிற இடத்தில் உள்ள முதன்மையான பெரிய நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது.  மருந்து நிறுவனங்களில் ஒவ்வொரு 10 மாத்திரைகள் விற்பனையாகும் போதும் ஒரு கேப்ஸ்யூல் விற்பனையாகிறது. ஆஸ்த்துமாவுக்கான மருந்துகளில், கேப்ஸ்யூல்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன.

மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் சார்பில் கூறும் போது, கேப்ஸ்யூல்கள் பயன்பாடு அலோபதி மருத்துவத்துக்கு மட்டும் என்கிற வரையறைக்குட்பட்டதல்ல. ஆயுர்வேத, சித்த  மருந்து தயாரிப்பாளர்களும் தற்போது  கேப்ஸ்யூல் முறையைக் கையாளத் தொடங்கி விட்டார்கள்.

தாழ்த்தப்பட்ட வகுப்பினராக உள்ளவர்களே எங்களைப் போன்ற  மருந்து தொழில் நிறுவனங்களுக்கு கால்நடை எலும்புகளை சேகரித்துக் கொடுத்து வருகிறார்கள். இந்தத் தடையானது அவர்கள் மத்தியில் பெரும் தாககத்தை ஏற்படுத்திவிடும். ஆகவே, இனி நாங்கள் கேப்ஸ்யூல்களை இறக்குமதி செய்ய வேண்டி உள்ளது. அதேநேரத்தில் பலபேருக்கான பணிவாய்ப்பும் இதில் தொடர்புள்ளது என்பதை உணரவேண்டும்.

மருந்துகளில் ஏராளமான அளவில் மாட்டிறைச்சியிலிருந்து பெறப்படக்கூடிய பொருள்கள்  பயன்படுத்தப்படுகின்றன. இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் ரோட்டாவைரஸ் போன்ற தடுப்பு மருந்துகள் எதிர்ப்பு சக்திக்காக பரிந்துரைக்கப்படுகின்றன. 

அறுவை சிகிச்சையின் போது இரத்தம் உறைந்து போவதைத் தடுப்பதற்கான துரோம்பின் எனும் மருந்து மாட்டின் கருவிலிருந்து பெறப்படும் சீரத்திலிருந்தும் பசு மாட்டின் கருவிலிருந்தும் துணைப்பொருள்களாக பெறப்படுகின்றன.

இல்லினாய்ஸ் பகுதியில் இயங்கிவரும் பன்னாட்டு செர்ரம் தொழில் கூட்டமைப்பு விலங்குகளிலிருந்து பெறப்படும் சீரம் விற்பனையை முறைப்படுத்தி வருகிறது. அந்த அமைப்பின் உறுப்பினர்கள் மருந்து நிறுவனங்களுக்கு பெற்றுத் தருவதற்கும், விற்பனை செய்வதற்கும் பொறுப்பானவர்களாக உள்ளனர்.  மாட்டின் கருவிலிருந்து கிடைக்கும் இரத்தம் இந்தியாவிலிருந்து பெறப்படுகிறது. 

பன்னாட்டு செர்ரம் தொழில் கூட்டமைப்புடன் இணைந்து  இந்தியாவிலிருந்து விநியோகஸ்தர்கள் அதற்குரிய கால்நடை மருத்துவச் சான்றுகளுடன் அளிப்பார்கள் என்பதை அக்கூட்டமைப்பின் சார்பில் உறுதி செய்துள்ளனர்.

மாட்டிறைச்சிக்குத் தடை விதிக்கின்ற மாநில அரசுகள் வெளிநாடுகளிலிருந்து கால்நடைகளின் இறைச்சிகளை இறக்குமதி செய்வதையும் தண்டனைக்கு உரிய குற்றமாக கொண்டு வருவதில், மருத்துவத் துறைக்காக மாட்டிறைச்சி தடை குறித்து மூளையை பயன்படுத்தி மறு சிந்தனை செய்ய வேண்டும்.  கடந்த பத்தாண்டுகளில் மருந்து தொழிலில் கால்நடைகளில் மாற்றாக சிலவற்றைப் பயன்படுத் துவது குறித்து ஆய்வு நடைபெற்றுள்ளது.

அறுவை சிகிச்சைக்குப் பின் தையல் போட பயன்படும் நூலாக, மாட்டின் குடலுக்குப் பதிலாக மருந்து நிறுவனங்கள் செம்மறி ஆடுகளைப் பயன்படுத்தத் தொடங்கி உள்ளன. என்றாலும் மாட்டிறைச்சியின் துணைப் பொருளையே பரவலாகப் பயன்படுத்தி வருகிறார்கள்

சில ஆண்டுகளுக்கு முன்பாக தாவரங்களிலிருந்து (கடற்பாசி, மரக்கூழ்) பெறப்படும் கேப்ஸ்யூல்களை அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால் மருந்து நிறுவனங்கள் அதை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. இதற்கெல்லாம் பற்றாக்குறை ஏற்படும் என்று நிறுவனங்கள் கருதின.  நுகர்வோரும் தாங்கள் உட் கொள்ளும் மருந்து வேலை செய்கிறதா என்பதை தவிர குப்பி பிளாஸ்டிக்கா, மாட்டின் ஜெலட்டினா, மரக்கூழா என்பதைப்பற்றி  கவலை கொள்வதில்லை.

இந்த மாட்டிறைச்சி விவகாரத்தின் மறுபக்கத்தை பார்த்தீர்களா? 

நன்றி : சுரன்

http://inneram.com/articles/best-articles/1986-other-side-of-beef.html
மாட்டிறைச்சியின் மறுபக்கம்.! மாட்டிறைச்சியின் மறுபக்கம்.! Reviewed by நமதூர் செய்திகள் on 22:18:00 Rating: 5

No comments:

Powered by Blogger.