வி.களத்தூரில் புதிய வரலாறு படைக்க போகும் மக்கள் சங்கமம் மாநாடு!


வி.களத்தூரில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சார்பாக மக்கள் சங்கமம் மாபெரும் மாநாடு மே 17 அன்று வி.களத்தூர் சந்தை திடலில் நடைபெற இருக்கிறது. அந்த மாநாட்டுக்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. 

வி.களத்தூரில் இதுவரையில் எந்த மாநாடும் நடைபெற்றது இல்லை. அதனால் மக்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த மாநாடு குறித்து அறிவிப்பு வந்தவுடன் அதற்கான பணிகளில் இரவு-பகலாக உழைத்து வருகின்றனர் அந்த அமைப்பினர்.
மக்கள் சங்கமம் மாநாடு குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு சுவர் விளம்பரம், சுவரொட்டி பிரச்சாரம், துண்டு பிரச்சாரம், பேனர், குடும்ப சந்திப்பு நிகழ்ச்சி என தொடர்ந்து மாநாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.  குடும்ப சந்திப்பு நிகழ்ச்சியில் ஆர்வமுடன் பலர் பங்குபெற்று சிறப்பித்தனர்.   

மாநாட்டுக்கு முன்பாக பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அவை: சூரா மனனம் போட்டி, பாங்கு சொல்லும் போட்டி, 40 ஹதீஸ்கள் ஒப்பித்தல் போட்டி, பேச்சுப்போட்டி, கருத்தரங்கம், கேள்வி-பதில் நிகழ்ச்சி, சிறுவர்களுக்கான விளையாட்டு போட்டிகள், வாலிபால் விளையாட்டு போட்டி என பல போட்டிகள் மாணவ, மாணவிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

இந்த மாநாட்டின் ஒரு அங்கமாக கண்காட்சி இடம்பெற்றுள்ளது. அதில்
முக்கியமாக நாம் அறியாத வி.களத்தூர் வரலாறு, ரஞ்சன்குடி கோட்டை வரலாறு, இந்தியாவில் முஸ்லிம்களின் வரலாறு, இஸ்லாமிய வரலாறு, பாபரி மஸ்ஜித் வரலாறு, பாப்புலர் ப்ரண்ட் வரலாறு என பல பிரிவுகளில் வரலாறு அறிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

கண்காட்சியை தொடர்ந்து விழிப்புணர்வு நாடகம், மாபெரும் மாநாடு நடைபெறுகிறது. இதற்காக பாப்புலர் ப்ரண்ட் அமைப்பினர் மாநாட்டுக்குழு, வி.களத்தூர் வரலாறு அறியும் குழு, நாடகக்குழு, மீடியா தொடர்பு குழு, மக்கள் சந்திப்பு குழு என்று சுறுசுறுப்பாக பணியாற்றி வருகிறார்கள். 

மக்கள் சங்கமம் மாநாட்டில் பெருந்திரளாக மக்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வி.களத்தூர் வரலாற்றில் இந்த மாநாடு ஒரு மைல் கல்லாக 
புதிய சரித்திரம் படைக்கும்!.

- வி.களத்தூர் பாரூக்
வி.களத்தூரில் புதிய வரலாறு படைக்க போகும் மக்கள் சங்கமம் மாநாடு! வி.களத்தூரில் புதிய வரலாறு படைக்க போகும் மக்கள் சங்கமம் மாநாடு! Reviewed by நமதூர் செய்திகள் on 01:24:00 Rating: 5

No comments:

Powered by Blogger.