23 வருடங்களை சிறையில் தொலைத்த நிசார்


பாபரி மஸ்ஜித் இடிப்பின் முதாலம் நினைவு தினத்தில் நடத்தப்பட்ட ஐந்து குண்டுவெடிப்புகளை நிகழ்த்தியவர் என்று 23 வருடங்களுக்கு முன்னாள் கைது செய்யப்பட்டார் நிசாருத்தின் அஹமத். தற்பொழுது அவரை நீதிமன்றம் நிரபராதி என்று விடுதலை செய்துள்ளது.

1994, ஜனவரி மாதம் 15 ஆம் தேதி நிசாரை கர்நாடகா மாநிலம் குல்பர்காவில் உள்ள அவரது வீட்டின் அருகே இருந்து காவல்துறையினர் கடத்திச்சென்றனர். அப்போது இரண்டாம் ஆண்டு மாணவராக இருந்தார் நிசார்.

தன்னை காவல்துறையினர் பிடித்துச் சென்றது குறித்து நிசார் கூறுகையில், “எனக்கு 15 நாட்களில் தேர்வு இருந்தது. நான் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தேன். நான் செல்லும் வழியில் ஒரு காவல்துறை வாகனம் நின்று கொண்டிருந்தது. அதிலிருந்து ஒருவர் இறங்கி என்னிடம் துப்பாக்கியை காட்டி என்னை மிரட்டி வாகனத்தில் ஏற்றினார். நான் கைது செய்யப்பட்டது குறித்து கர்நாடக காவல்துறையினருக்கு எந்த ஒரு தகவலும் தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை. என்னை கடத்தியவர்கள் ஹைதராபாத்தில் இருந்து வந்திருந்தனர். அவர்கள் என்னை ஹைதராபாத்துக்கு கடத்திச் சென்றனர்.” என்று கூறுகிறார்.

ஜனவரி 15 ஆம் தேதி கடத்தப்பட்டவர் பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படுகிறார். அதன் பிறகே அவரைப்பற்றிய தகவல் அவரது குடும்பத்திற்கு தெரிய வருகிறது. அதன் பிறகு ஏப்ரல் மாதம் அவரது மூத்த சகோதரரம் கைது செய்யப்படுகிறார்.

“எங்கள் தந்தை நூருத்தின் அஹமத் எல்லாவற்றையும் விட்டுவிட்டு தனியாக எங்கள் விடுதலைக்காக போராடினார். 2006 ஆம் ஆண்டு அவர் உயிரிழந்த நேரம் வரை அவருக்கு எங்கள் விடுதலை குறித்து எந்த ஒரு நம்பிக்கையும் இல்லை.இப்போது எங்களிடம் எதுவுமே இல்லை.” என்று கூறுகிறார் நிசார்.

குற்றமற்றவர் என்று தீர்ப்பு வந்ததும் ஜெய்பூர் சிறையில் இருந்து கடந்த மே 11 ஆம் தேதி விடுதலையானார். தனது கைது, சிறைவாசம் மற்றும் விடுதலையை குறித்து அவர் கூறுகையில், தான் இதுவரை 8150 நாட்கள் சிறையில் களித்துள்ளதாக கூறுகிறார். இன்னும் தன்னுடைய வாழ்வு முடிந்துவிட்டது என்றும் இப்போது, தான் ஒரு உயிருள்ள ஒரு பிணம் என்றும் கூறியுள்ளார்.

“நான் சிறையில் அடைக்கப்படும் போது 20 வயதை கூட அடைந்திருக்கவில்லை. ஆனால் இன்று 43 வயதை அடைந்துவிட்டேன். எனது தன்கையை கடைசியாக நான் பார்த்தபோது அவளுக்கு 12 வயது. ஆனால் தற்பொழுது அவளது மகளுக்கு 12 வயதாகிவிட்டது. எனது மருமகள் 1 வயதுடைவளாக இருந்தாள். தற்பொழுது அவளுக்கு திருமணம் ஆகிவிட்டது. ஒரு தலைமுறையே என் வாழ்வில் இருந்து தவறிவிட்டது என்று அவர் கூறியுள்ளார்.

விடுதலையான முதல் நாளை விடுதியில் கழிக்க நேர்ந்த நிசார் தன்னால் அங்கு உறங்க இயலவில்லை என்று கூறுகிறார். “அங்கு மெத்தைகள் இருந்தன. நான் இது வரை ஒரு மெல்லிசான போர்வையுடன் தரையில் தான் உறங்கினேன்” என்று கூறியுள்ளார்.

நிசாரைப் போலவே அவரது சகோதரர் ஜாஹிரும் கைது செய்யப்பட்டார். 2008 ஆம் ஆண்டு மே மாதம் 9 ஆம் தேதி அவரது உடல் நலத்தை கருத்தில் கொண்டு உச்ச நீதிமன்றம் அவரை விடுவித்தது. சிறையில் இருக்கும்போது அவருக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்பட்டது.

ஜாகிர் தனது சகோதரர் விடுதலையை குறித்து கூறுகையில், ” நான் என் சகோதரரின் விடுதலையிலேயே முழு கவனத்தை செலுத்தினேன். நான் தொடர்ச்சியாக நீதிமன்றத்திற்கு வின்னப்பனகளை அனுப்பினேன். நாங்கள் எவ்வாறு அநீதிக்கு உள்ளாக்கப்பட்டோம் என்று கூறினேன். இருந்தியில் என் சகோதரர் மற்றும் மேலும் இருவரை நீதிமன்றம் குற்றமற்றவர் என்று விடுவித்துள்ளது என்று கூறியுள்ளார்.

இவர்களுடன் கைது செய்யப்பட்ட 10 பேர் மீதான குற்றத்தை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. அதில் ஒருவருக்கு 85 வயது,  இன்னொருவருக்கு 79, மற்றொருவருக்கு 74. இவர்கள் அனைவரும் சிறையிலேயே உயிர் இழக்கப் போகின்றனர் என்கிறார் நிசார்.

http://www.puthiyavidial.com
23 வருடங்களை சிறையில் தொலைத்த நிசார் 23 வருடங்களை சிறையில் தொலைத்த நிசார் Reviewed by நமதூர் செய்திகள் on 06:33:00 Rating: 5

No comments:

Powered by Blogger.