திருச்சி அருகே நடந்த முஸ்லிம்கள் தப்லீக் மாநாட்டில் 10 லட்சம் பேர் பங்கேற்பு!

திருச்சி அருகே நடந்த முஸ்லிம்கள் தப்லீக் மாநாட்டில் 10 லட்சம் பேர் பங்கேற்பு!
திருச்சி (29 ஜன 2019): திருச்சி அருகே இனாம் குளத்தூரில் நடைபெற்ற முஸ்லிம்கள் தப்லீக் மாநாட்டில் 10 லட்சம் பேர் பங்கேற்றனர்.
முஸ்லிம்களின் மாநில அளவிலான தப்லீக் மாநாடு கடந்த சனிக்கிழமை தொடங்கியது. இறுதி நாளான 3-வது நாளான திங்கட்கிழமை இறுதி மாநாட்டு திடலில் மக்கள் வெள்ளம் நிரம்பி வழிந்தது. இதில் 10 லட்சத்திற்கு மேற்ப்பட்டோர்கள் கலந்து கொண்டார்கள். இறுதி நாளான திங்கள் கிழமை (28 ஜனவரி  2019) அன்று மதியம் புதுதில்லியில் உள்ள தப்லீஃக் இயக்கத்தின் அமீர் ஹஜ்ரத் ஜீ ச ஆத் மௌலானா உலக அமைதிக்காவும் மற்றும் சமய நல்லிணக்கத்திற்கும், உலகத்தில் உள்ள அனைத்து முஸ்லிம்களும் எவ்வித பிரச்சினைகள் இல்லாமல் வாழ்வதற்கு சிறப்பு பிரார்த்தனை செய்தார். பின்னர் மாநாடு நிறைவு பெற்றது.
முன்னதாக மூன்று நாட்களும் முஸ்லிம் அறிஞர்கள் சிறப்பு சொற்பொழிவாற்றினர். இந்த மாநாட்டில் இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் மற்றும் எஸ்டிபிஐ தலைவர் தெஹ்லான் பாக்கவி, மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட முஸ்லிம் அரசியல் கட்சி தலைவர்களும் பங்கேற்றனர்.
மேலும் இந்த மாநாட்டிற்கு இலங்கை, சவுதி அரபேபியா, மலேசிய, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு வெளி நாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் வந்து கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டில் பல்வேறு முஸ்லிம் அமைப்புகளின் தன்னார்வ தொண்டர்களும் தமுமுக உள்ளிட்ட அமைப்புகளின் ஆம்புலன்ஸ்களும் உடனடி தேவைக்கு பயன்படுத்தப் பட்டன.
இந்த மாநாட்டிற்கு பந்தல் அமைக்கும் பணி நான்கு மாதங்களுக்கு முன்பே தொடங்கியது. மேலும் இதற்காக எந்தவித பொது விளம்பரம், அல்லது பிளக்ஸ் போன்றவை அமைக்காதது குறிப்பிடத்தக்கது.
திருச்சி அருகே நடந்த முஸ்லிம்கள் தப்லீக் மாநாட்டில் 10 லட்சம் பேர் பங்கேற்பு! திருச்சி அருகே நடந்த முஸ்லிம்கள் தப்லீக் மாநாட்டில் 10 லட்சம் பேர் பங்கேற்பு! Reviewed by நமதூர் செய்திகள் on 02:42:00 Rating: 5

No comments:

Powered by Blogger.