18 தொகுதிகளுக்கும் தேர்தல் எப்போது?

18 தொகுதிகளுக்கும் தேர்தல் எப்போது?

தமிழகத்தில் காலியாக உள்ள 18 தொகுதிகளில் எப்போது இடைத்தேர்தல் நடைபெறும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழகத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகள் உட்பட 20 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தப்படாமல் காலியாக உள்ளன. முன்னாள் முதல்வர் கலைஞரின் தொகுதியான திருவாரூருக்கு இடைத்தேர்தல் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு, அந்த அறிவிப்பும் தற்போது ரத்து செய்யப்பட்டது.
இதற்கிடையே திருமங்கலத்தைச் சேர்ந்த தாமோதரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், ”முதல்வருக்கு எதிராக ஆளுநரிடம் மனு கொடுத்த 18 எம்.எல்.ஏ.க்களையும் சபாநாயகர் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதற்கு எதிராக 18 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதில்லை எனத் தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தி புதிய உறுப்பினர்களைத் தேர்வு செய்யத் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை இன்று (ஜனவரி 7) விசாரித்த நீதிமன்றம், 18 தொகுதிகளுக்கும் எப்போது தேர்தல் நடத்தப்படும் என்று வரும் 22ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்குமாறு தலைமை தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்துள்ளது.
https://minnambalam.com/k/2019/01/07/47
18 தொகுதிகளுக்கும் தேர்தல் எப்போது? 18 தொகுதிகளுக்கும் தேர்தல் எப்போது? Reviewed by நமதூர் செய்திகள் on 03:05:00 Rating: 5

No comments:

Powered by Blogger.