சுடுகாட்டையும் விட்டு வைக்காத ஈஷா மையம் – ஊர் தலைவர் பரபரப்பு குற்றச்சாட்டு



பழங்குடியின மக்கள் காலம்காலமாக பயன்படுத்தி வந்த சுடுகாட்டினை ஈஷா யோகா மையத்தினர் ஆக்கிரமித்து உள்ளதாக மடக்காடு பழங்குடியின ஊர்த் தலைவர் குற்றம்சாட்டியுள்ளார்.
கோவையை அடுத்த வெள்ளிங்கிரி மலையடிவாரத்தில் அமைந்துள்ள ஈஷா யோகா மையம் அருகே மடக்காடு என்ற பழங்குடியின கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள 75 குடும்பங்களை சேர்ந்தவர்கள் அப்பகுதியில் உள்ள சுடுகாட்டினை காலங்காலமாக பயன்படுத்தி வருகின்றனர்.
 
இந்நிலையில், சுற்றுவட்டார நிலங்களை விலைக்கு வாங்கியுள்ள ஈஷா யோகா மையம் தாங்கள் ஆண்டாண்டு காலமாக பயன்படுத்தி வந்த சுடுகாட்டினை ஆக்கிரமித்து உள்ளதாக மடக்காடு பழங்குடியின மக்களின் சுடுகாட்டினை ஆக்கிரமித்து உள்ளதாக மடக்காடு பழங்குடியின மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
 
மேலும், நில அளவை செய்து யோகா மையத்தினர் சுடுகாட்டின் நடுவில் கல் நட்டுவைத்து உள்ளதாகவும் பழங்குடியின மக்கள் கூறியுள்ளனர்.
 
இதனையடுத்து, தங்களது சுடுகாட்டினை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென பழங்குடியின மக்கள் மாவட்ட நிர்வாகத்தினரிடம் புகார் அளித்துள்ளனர்.
 
பழங்குடியின மக்களின் சுடுகாட்டையும் ஈஷா மையம் விட்டுவைக்கவில்லை என புது புகார் கிளம்பியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுடுகாட்டையும் விட்டு வைக்காத ஈஷா மையம் – ஊர் தலைவர் பரபரப்பு குற்றச்சாட்டு சுடுகாட்டையும் விட்டு வைக்காத ஈஷா மையம் – ஊர் தலைவர் பரபரப்பு குற்றச்சாட்டு Reviewed by நமதூர் செய்திகள் on 03:59:00 Rating: 5

No comments:

Powered by Blogger.