நவம்பர் 1ம் தேதி உணவுப் பாதுகாப்புச்சட்டம் நடைமுறைக்கு வருகிறது!

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் நவம்பர் 1 ஆம் தேதி முதல் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.  இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கூறப்பட்டுள்ளதாவது:
தேசிய உணவுப்பாதுகாப்புச் சட்டத்தின்படி, ஒரு குடும்பத்தில் ஒரு நபர் மட்டுமே இருந்தால் மாதம் ஒன்றுக்கு 5 கிலோ அரிசி மட்டுமே வழங்க இயலும் என்றும் ஆனால், தற்போது ஒரு நபர்‌ மட்டுமே உள்ள குடும்பத்திற்கு மாதம் ஒன்றுக்கு 12 கிலோ அரசி வழங்கப்பட்டு வருகிறது. அதே அளவினைத் தமிழக அரசு தொடர்ந்து வழங்கும் . தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் படி ஒரு குடும்பத்தில் இரண்டு நபர்கள் இருந்தால் மாதம் ஒன்றுக்கு 10 கிலோ அரிசி மட்டுமே வழங்க இயலும். ஆனால், தமிழக அரசு தற்போது வழங்கும் 16 கிலோ அரிசி தொடர்ந்து வழங்கப்படும் . 3 முதல் 10 நப‌ர் வரை கொண்ட குடும்பங்களுக்கு தற்போது 20 கிலோ அரிசி வழங்கப்பட்டு வரும் நிலையில், உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்படி இனி அந்த அளவு அதிகரிக்கப்படும் . அதன் படி 5 ‌ உறுப்பினர்கள் உள்ள குடும்பத்திற்கு இனி 25 கிலோ அரிசியும், 6 பேர் கொண்ட குடும்பங்களுக்கு இனி 30 கிலோ அரிசியும் 7 பேர் கொண்ட குடும்பங்களுக்கு 35 கிலோ அரிசியும், 8 பேர் கொண்ட குடும்பங்களுக்கு 40 கிலோ அரிசியும், 9 பேர் கொண்ட குடும்பங்களுக்கு 45 கிலோ அரிசியும், 10 பேர் கொண்ட குடும்பத்திற்கு 50 கிலோ அரிசியும் வழங்கப்படும்’.
நவம்பர் 1ம் தேதி உணவுப் பாதுகாப்புச்சட்டம் நடைமுறைக்கு வருகிறது! நவம்பர் 1ம் தேதி உணவுப் பாதுகாப்புச்சட்டம் நடைமுறைக்கு வருகிறது! Reviewed by நமதூர் செய்திகள் on 23:35:00 Rating: 5

No comments:

Powered by Blogger.