தமிழனின் தலையில் இன்னுமோர் இடி!


தமிழகத்துக்கு மென்மேலும் இக்கட்டான சூழலை உருவாக்க வேண்டும் என்பதில் கர்நாடக அரசு தீவிரமாக உள்ளது. காவிரி நீருக்காக தமிழர்கள் கர்நாடகத்திடம் போராடிக்கொண்டிருக்க, அம்மாநில அரசோ மேலும் தமிழகத்துக்கு நெருக்கடி கொடுக்கும் விதத்தில் மேக்கேதாட்டு அணை கட்ட ரூ.5,700 கோடியில் திட்ட மதிப்பு தயார் செய்துள்ளது. இதுகுறித்து மைசூரில் முதல்வர் சித்தராமய்யா நேற்று செய்தியாளர்களிடம் கூறியது: “மேக்கேதாட்டு அணையை ரூ.5,700 கோடியில் கட்டுவதற்கான திட்ட விவர அறிக்கையைத் தயாரித்துள்ளோம். அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்பட்டதும், பணிகள் தொடங்கப்படும். மேக்கேதாட்டு அணையில் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரை வழங்கிவிட்டு எஞ்சியுள்ள நீரைச் சேமித்து, பெங்களூரு மக்களின் குடிநீர் விநியோகத்துக்கு மட்டுமின்றி, மின்சாரம் உற்பத்தி செய்யவும் பயன்படுத்தப்படும். காவிரி நதிப் படுகையில் 18.85 லட்சம் ஏக்கர் பாசனப் பகுதி உள்ளது. இதில் 6.15 லட்சம் ஏக்கரில் பயிர் நடவு செய்யப்பட்டுள்ளது. ஹேமாவதி அணையிலிருந்து கால்வாய்கள் மூலம் பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிட முடியாததால், 1.8 லட்சம் ஏக்கர் பயிர்கள் கருகின. வெள்ளம் மற்றும் வறட்சி நிவாரணப் பணிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்குமாறு மத்திய அரசுக்கு முன்மொழிவுகளை அனுப்பவிருக்கிறோம். 110 வட்டங்கள் வறட்சிப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தப் பட்டியலில் மேலும் சில வட்டங்கள் இணைக்கப்படும். வறட்சி காரணமாக விவசாயம் பாதிக்கப்பட்ட நிலையில் கடன் தொல்லையால் விவசாயிகள் யாரும் தற்கொலை செய்து கொள்ளக்கூடாது. வங்கியில் பெற்றுள்ள கடனைத் திருப்பிச் செலுத்துவதில் கால அவகாசம் அளிப்பது குறித்து யோசித்து முடிவு செய்யப்படும். பயிர்க்கடன் நிலுவைத் தொகையை கட்டாயப்படுத்தி விவசாயிகளிடம் வசூலிக்க வேண்டாம் என்றும் வங்கி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன். இதுகுறித்து பிரதமர் மோடியைச் சந்தித்து முறையிடவும் முடிவு செய்திருக்கிறேன். வரும் 21ஆம் தேதி மும்பையில் கோவா, மகாராஷ்டிர மாநில முதல்வர்களுடன் மகதாயி நதிநீர்ப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இதேபோல, கிருஷ்ணா, காவிரி நதி நீர்ப் பங்கீட்டு விவகாரங்களையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ளவே விரும்புகிறோம்” என்றார். ஆனால், மேக்கேதாட்டு அணை கட்டப்பட்டால் தமிழர்கள் காவிரியை கனவில் கூட காண முடியாது என்கிறார்கள் சிலர்.
தமிழனின் தலையில் இன்னுமோர் இடி! தமிழனின் தலையில் இன்னுமோர் இடி! Reviewed by நமதூர் செய்திகள் on 23:38:00 Rating: 5

No comments:

Powered by Blogger.