பகுத்தறிவுவாதிகளின் படுகொலை நன்கு திட்டமிடப்பட்டவை: நீதிமன்றம்!
மும்பை(28 ஆகஸ்ட் 2017): பகுத்தறிவுவாதிகள் நரேந்திர தபோல்கர் மற்றும் கோவிந்த் பன்சாரே ஆகியோர் நன்கு திட்டமிடப்பட்டே படுகொலை செய்யப்பட்டுள்ளனர். என்று மும்பை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மகாராட்டிர மாநிலத்தில் நரேந்திர தபோல்கர் 2013ஆம் ஆண்டிலும், கோவிந்த் பன்சாரே 2015 ஆம் ஆண்டிலும் இந்துத்துவா வெறிகொண்ட வன்முறை யாளர்களால் குறிவைக்கப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டார்கள்.
இந்த இரு கொலைகளுக்கும் தெளிவான ஒற்றுமை உள்ளது என்றும் மாநில CID யுடன் ஒருகிணைந்து நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, வங்கி பரிமாற்றங்கள், ATM பரிமாற்றங்கள், ரயில் முன்பதிவுகள் போன்ற தகவல்களை ஆராய்ந்து இவர்களை கண்டுபிடிக்குமாறு நீதிபதி தர்மாதிகாரி தெரிவித்துள்ளார். மேலும் நான்கு அல்லது ஐந்து மாநிலங்களுடன் மட்டும் தான் இந்த எல்லைகள் இணைகின்றன என்றும் அங்கு தான் குற்றவாளிகள் சென்றிருக்க முடியும் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார். இன்றைய காலகட்டத்தில் ஒருவர் அதிக நாள் தலைமறைவாக வாழ்வது இயலாத காரியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நீதிமன்றத்தின் ஆலோசனைகளை கருத்தில் கொண்டு புதிய விசாரணை அறிக்கைகளை வருகிற செப்டெம்பர் மாதம் 13 ஆம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும் கொல்லப்பட்ட இரு பகுத்தறிவுவாதிகளின் கும்டும்பத்தினரும், CBI இயக்குனர் மற்றும் உள்துறை செயலாளர் இந்த விசாரணைக்கு நேரடி பொறுப்பேற்க வேண்டும் என்ற தங்களின் கோரிக்கை அடைங்கிய அஃபிடவிட்டை சமர்பிக்குமாறு நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் பகுத் தறிவாளர் பேராசிரியர் எம்.எம்.கல்புர்கியை அவர் வீட்டின் கதவைத் தட்டியபோது கதவைத் திறக்கும்போதே சுடப்பட்டு கொல்லப் பட்டதும் நினைவுகூறத்தக்கது.
பகுத்தறிவுவாதிகளின் படுகொலை நன்கு திட்டமிடப்பட்டவை: நீதிமன்றம்!
Reviewed by நமதூர் செய்திகள்
on
04:47:00
Rating:
No comments: