’தமிழக மருத்துவத் துறையைக் கைப்பற்ற சதி’ - சென்னையில் நீட் எதிர்ப்புப் போராட்டம்
தமிழகம் முழுவதும் நீட் எதிர்ப்புப் போராட்டங்கள் தீவிரமாக நடந்துவருகின்றன. கடந்த வாரம் மத்திய அரசின் திடீர் பல்டிக்குப் பிறகு, மருத்துவ மாணவர்கள், சமூகநல அமைப்புகள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், நீட் தேர்வு மூலம் தமிழக மருத்துவத்துறையைக் கொள்ளையடிக்கும் சதி அரங்கேற்றப்படுகிறது என்று கூறி, சென்னையில் இன்று கண்டனப் போராட்டம் நடைபெற்றது.
நீட் விவகாரத்தில் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் என அறிவித்திருந்த புரட்சிகர இளைஞர் முன்னணி அமைப்பைச் சேர்ந்தவர்கள், இன்று முற்பகல் 11 மணிக்கு சைதாப்பேட்டை பனகல் மாளிகை முன்பு கூடினர். நீட் தேர்வு மூலம் தமிழ்நாட்டின் உரிமை பறிக்கப்பட்டுள்ளதற்கு மத்திய, மாநில அரசுகள் இரண்டுமே காரணம் என்றும் இட ஒதுக்கீடு, சமூக நீதியைப் பறிக்கும் நீட் தேர்வு முறையை முழுமையாக ரத்துசெய்ய வேண்டும் என்றும் முழக்கம் எழுப்பினார்கள்.
முழக்கம் எழுப்பிக்கொண்டே ஆளுநர் மாளிகைச் சாலையை நோக்கி அவர்கள் நகர முற்பட்டனர். அப்போது அவர்களை போலீஸார் கைதுசெய்தனர். சிறிது நேரம் முழக்கமிட்ட அவர்களை, சைதாப்பேட்டை போலீஸ்நிலையம் அருகில் உள்ள வணிகர் சங்க அறக்கட்டளை அரங்கத்தில் பிடித்துவைத்தனர்.
’தமிழக மருத்துவத் துறையைக் கைப்பற்ற சதி’ - சென்னையில் நீட் எதிர்ப்புப் போராட்டம்
Reviewed by நமதூர் செய்திகள்
on
04:57:00
Rating:
No comments: