மருத்துவக் கலந்தாய்வு: நிரம்பிய இடங்களின் விவரம்!
நீட் தேர்வு அடிப்படையில் நடைபெற்று வரும் மருத்துவக் கலந்தாய்வில் நேற்று (ஆகஸ்ட் 27) வரை 3009 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.
மருத்துவப் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் ஆகஸ்ட் 23 அன்று வெளியிடப்பட்டது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்தில் நீட் தேர்வு அடிப்படையில் சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் 24 முதல் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.
பொதுப்பிரிவுக்கான கலந்தாய்வு இன்று (ஆகஸ்ட் 28) நான்காவது நாளை எட்டியுள்ளது. மூன்றாம் நாளான நேற்றைய (ஆகஸ்ட் 27) கலந்தாய்வில் பங்கேற்கத் தரவரிசையில் 2,674ஆம் இடம் முதல் 4269ஆம் இடம் வரை பெற்ற 1,596 பேர் அழைக்கப்பட்டனர். இதில் கலந்தாய்வில் பங்கேற்றவர்கள் 1322 பேர். அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஒதுக்கீடு பெற்றவர்கள் 359 பேர், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் ஒதுக்கீடு பெற்றவர்கள் 210 பேர், இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் ஒதுக்கீடு பெற்றவர்கள் 13 பேர், அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் ஒதுக்கீடு பெற்றவர்கள் 33 பேர், சுய நிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் 91 பேர். அதன்படி, நேற்று மட்டும் 706 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
மேலும் நேற்று 276 பேர் கலந்தாய்வில் பங்கேற்கவில்லை, 614 பேர் காத்திருப்பு பட்டியலில் உள்ளனர். மேலும் தற்போது வரை 3009 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. அதில் சிறப்பு பிரிவினருக்கு 14 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. பொது பிரிவினருக்கான கலந்தாய்வில் முதல் நாள் 1029 இடங்களும், இரண்டாவது நாள் 1260 இடங்களும், மூன்றாம் நாள் 706 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.
முதல்கட்டக் கலந்தாய்வு வரும் 30ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், சுயநிதி கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீடு இடங்கள், அரசு, சுயநிதி கல்லூரிகளில் மாணவர்கள் சேராத இடங்களுக்குக் கலந்தாய்வு நடத்தப்படும். அதன்படி, செப்டம்பர் 6ஆம் தேதி வரை கலந்தாய்வு நடத்தப்படும் என்று சுகாதாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவக் கலந்தாய்வு: நிரம்பிய இடங்களின் விவரம்!
Reviewed by நமதூர் செய்திகள்
on
04:32:00
Rating:
No comments: