எஸ்.டி.பி.ஐ விழாவில் சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிப்பு!
சென்னை (26 ஜூன் 2018): எஸ்.டி.பி.ஐ. கட்சியின் பத்தாம் ஆண்டு துவக்க விழா, பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி மற்றும் சமூகத்தில் பல்வேறு தளங்களில் மக்களுக்கு சேவையாற்றிய சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா நேற்று (ஜூன் 25) சென்னை ராயபுரம் ரம்ஜான் மஹாலில் நடைபெற்றது.
எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாநில துணைத் தலைவர்கள் அம்ஜத் பாஷா, நெல்லை முபாரக், பொதுச்செயலாளர் அப்துல் ஹமீது, செயலாளர்கள் அச.உமர் பாரூக், ரத்தினம், பொருளாளர் முகைதீன், எஸ்.டி.டி.யூ மாநில தலைவர் முஹம்மது ஃபாரூக், மாநில செயற்குழு உறுப்பினர் சாமுவேல் பால், வர்த்தக அணி மாநில செயலாளர் அஜ்மல் கான், விம் மாநில தலைவி நஜ்மா பேகம், வழக்கறிஞர் அணி மாநில செயலாளர் ராஜா முகமது, ஊடக மற்றும் மக்கள் தொடர்பு ஒருங்கிணைப்பாளர் அப்துல் கரீம், வட சென்னை மாவட்ட தலைவர் நேதாஜி ஜமால், மத்திய சென்னை மாவட்ட தலைவர் முகமது ஹூசைன், தென்சென்னை மாவட்ட தலைவர் முகமது சலீம், காஞ்சி வடக்கு மாவட்ட தலைவர் முகம்மது பிலால், காஞ்சி தெற்கு மாவட்ட தலைவர் தமிமுன் அன்சாரி, திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தலைவர் செய்யது அகமது, திருவள்ளூர் மேற்கு மாவட்ட தலைவர் முகம்மது புகாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முப்பெரும் விழாவில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் சு.திருநாவுக்கரசு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
மேலும், இந்நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாநில தலைவர் முஹம்மது இஸ்மாயில், இ.யூ.முஸ்லிம் லீக் மாநில செயலாளர் காயல் மஹ்பூப், கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தின் இனிக்கோ இருதயராஜ், இந்திய தேசிய லீக் கட்சி தலைவர் பஷீர் அகமது, இந்திய தேசிய லீக் பொதுச்செயலாளர் நிஜாமுதீன், இந்திய தவ்ஹீத் ஜமாத் துணைத்தலைவர் முஹம்மது முனீர், ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் மாநில ஊடகத்துறை செயலாளர் முகமது அமீன், முஸ்லிம் தொண்டு இயக்க தலைவர் மன்சூர், ஜமாஅத்துல் உலமா சபை துணைத்தலைவர் தர்வேஷ் ரஷாதி, அப்பல்லோ ஹனீபா, எஸ்.டி. கூரியர் நிர்வாக இயக்குனர் நவாஸ் கனி, ஒயிட் ஹவுஸ் சேர்மன் அப்துல் பாரி உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் டாக்டர் அம்பேத்கர் விருது விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களுக்கும், காயிதேமில்லத் விருது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவர் குமரி அனந்தன் அவர்களுக்கும், தந்தை பெரியார் விருது மக்கள் கண்காணிப்பகம் அமைப்பின் ஹென்றி திபேன் அவர்களுக்கும், காமராசர் விருது சமூக நீதி முரசு ஆசிரியர் சி.எம்.என். சலீம் அவர்களுக்கும், நம்மாழ்வார் விருது மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் அவர்களுக்கும், அன்னை தெரசா விருது ஜீவோதயா நல்வாழ்வு மையத்தின் லலிதா தெரசா அவர்களுக்கும், கவிக்கோ விருது வரலாற்று ஆய்வாளர் செ.திவான் அவர்களுக்கும், பழனிபாபா விருது குணங்குடி ஆர்.எம்.ஹனீபா அவர்களுக்கும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் டாக்டர் அம்பேத்கர் விருது விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களுக்கும், காயிதேமில்லத் விருது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவர் குமரி அனந்தன் அவர்களுக்கும், தந்தை பெரியார் விருது மக்கள் கண்காணிப்பகம் அமைப்பின் ஹென்றி திபேன் அவர்களுக்கும், காமராசர் விருது சமூக நீதி முரசு ஆசிரியர் சி.எம்.என். சலீம் அவர்களுக்கும், நம்மாழ்வார் விருது மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் அவர்களுக்கும், அன்னை தெரசா விருது ஜீவோதயா நல்வாழ்வு மையத்தின் லலிதா தெரசா அவர்களுக்கும், கவிக்கோ விருது வரலாற்று ஆய்வாளர் செ.திவான் அவர்களுக்கும், பழனிபாபா விருது குணங்குடி ஆர்.எம்.ஹனீபா அவர்களுக்கும் வழங்கப்பட்டன.
மேலும், ஓய்வுபெற்ற சிறந்த அரசு அதிகாரிக்கான விருது முன்னாள் தமிழக உள்துறை செயலாளர் செய்யது முனீர் கோதா ஐ.ஏ.எஸ். அவர்களுக்கும், சிறந்த வழக்கறிஞருக்கான விருது மூத்த வழக்கறிஞர் ப.பா. மோகன் அவர்களுக்கும், சமூக அக்கறையுள்ள சிறந்த கலைப்பணிக்காக அறம் திரைப்பட இயக்குநர் கோபி நயினார் அவர்களுக்கும், ஊடகத் துறையில் சிறப்பாக செயல்படுவதற்காக குங்குமம் தோழி பொறுப்பாசிரியை கவின் மலர் அவர்களுக்கும், தொழில்துறையில் சிறந்து விளங்கி சேவை செய்துவருவதற்காக தி புரபஷனல் கூரியர் நிர்வாக இயக்குநர் எஸ்.அஹமது மீரான் அவர்களுக்கும், இஸ்லாமிய மார்க்கப் பணியில் சிறந்து விளங்கும் ஜமாத்துல் உலமா சபையின் அப்துர்ரஹ்மான் மிஸ்பாஹி மற்றும் சிறந்த சாதனை மாணவன் பஸ்லுர் ரஹ்மான் ஆகியோருக்கும் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய எஸ்.டி.பி.ஐ. மாநிலத்தலைவர் தெகலான் பாகவி தனது உரையில்,
“சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா சார்பில் ஒன்பதாவது ஆண்டாக சமூக நல்லிணக்க, சமுதாய நல்லிணக்க நிகழ்ச்சியாக, சகோதரத்துவத்தை வலியுறுத்தும் நிகழ்ச்சியாக ஈத்மிலன் என்கிற பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சியினை தொடர்ந்து நடத்தி வருகிறது. பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சிகளில் ஒரு மிகச்சிறந்த முன்மாதிரியை எஸ்.டி.பி.ஐ கட்சி உருவாக்கியிருக்கிறது.
சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா தனது 10 –வது ஆண்டில் பாதத்தைப் பதிக்கிறது. இந்த குறுகிய காலத்திற்குள், தொண்டர்களுடைய உழைப்பு, தியாகம் காரணமாக எஸ்.டி.பி.ஐ. என்பது ஒரு முதிர்ச்சியடைந்த அரசியல் கட்சி என்ற நற்பெயரை சம்பாதித்திருக்கிறது. போராட்ட அரசியலை தாண்டி தேர்தல் அரசியலிலும் எஸ்.டி.பி.ஐ. கட்சி கடந்த காலங்களில் சிறப்பாக செயல்பட்டு மக்களின் வாக்குகளை பெற்றுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் எஸ்.டி.பி.ஐ. கட்சி அடைந்துள்ள வளர்ச்சி காரணமாக, எதிர்வரும் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தல்களிலும் எஸ்.டி.பி.ஐ. கட்சி தனது கரத்தை இன்னும் வலுவாக பதிக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி என்றாலே இஸ்லாமிய அழைப்பியல் நிகழ்ச்சி என்பதை மாற்றி, இதனை ஒரு அரசியல் நிகழ்வாக, சமுதாய புரிந்துணர்வு நிகழ்வாக, இஸ்லாமியர்களின் வழிபாடுகளை, கடமைகளை புரிந்து கொள்கின்ற நிகழ்வாக, ஒரு சிறப்பான ஒற்றுமைக்கான நிகழ்சியாக இந்த நிகழ்ச்சியை எஸ்.டி.பி.ஐ கட்சி நடத்தி வருகிறது. 9 வது ஆண்டாக நடைபெறக்கூடிய இந்நிகழ்ச்சியை கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் முப்பெரும் விழாவாக நாங்கள் முன்னெடுத்திருக்கிறோம்.
இந்நிகழ்ச்சியில் மிக முக்கியமான சாதனையாளர்கள், மிகச்சிறந்த ஆளுமைகள், ஒவ்வொரு துறை சார்ந்த சேவையாளர்கள் ஆகியோரை தேர்ந்தெடுத்து தலைவர்களின் பெயரில் விருதுகளை வழங்கி எஸ்.டி.பி.ஐ. கட்சி கெளரவிக்கிறது. அரசியல் நோக்கங்களுக்கு அப்பாற்பட்டு, இவர்களது சேவை சமூகத்துக்கு தேவை என்பதை உணர்ந்து இவர்களை எஸ்.டி.பி.ஐ கட்சி கெளரவித்து பாராட்டுகிறது.” என்றார்.
எஸ்.டி.பி.ஐ விழாவில் சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிப்பு!
Reviewed by நமதூர் செய்திகள்
on
23:29:00
Rating:
No comments: