மலைவாழ் மக்களின் அவல நிலை!
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே மலைவாழ் மக்களின் வழித் தடத்தைக் கேரள வனத் துறை மூடியுள்ளதால், 6 கிமீ சுற்றி கூட்டாற்றைக் கடந்து செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.
ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட அமராவதி வனச் சரகத்தில் பழங்குடி மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் பல நூறு ஆண்டுகளாக சம்பாக் காடு பாதையைப் பயன்படுத்தி வந்தனர். கடந்த பிப்ரவரி மாதம் கேரள வனத் துறையினர் சம்பாக் காடு தங்களுக்குச் சொந்தமான பகுதி எனக் கூறி அந்தப் பாதையை அடைத்துவிட்டனர். இதனால் மலைவாழ் மக்கள் 6 கிமீ சுற்றி கூட்டாறு வழியாக தங்களின் போக்குவரத்தைத் தொடர்ந்தனர். இந்த நிலையில் தென்மேற்குப் பருவ மழையானது தொடங்கிய நிலையில் கூட்டாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. இதனால் மலைவாழ் மக்கள் ஆற்று வெள்ளத்தைக் கடந்து செல்ல வேண்டிய அபாய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
மேலும், மலைவாழ் மக்களுக்கு இலவச ரேஷன் அரிசி கொண்டு செல்லும் வாகனமும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. கூட்டாற்றின் மேல் மேம்பாலம் கட்டித்தர வேண்டும் அல்லது கேரள வனத் துறையிடம் பேச்சுவார்த்தை நடத்தி சம்பாக் காடு பகுதியை மீட்டுத் தர வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக இருக்கிறது.
மலைவாழ் மக்களின் அவல நிலை!
Reviewed by நமதூர் செய்திகள்
on
00:19:00
Rating:
No comments: