பாதுகாப்பு துறையில் 100 சதவீத வெளிநாட்டு முதலீட்டை அனுமதிக்கக்கூடாது! - எஸ்.டி.பி.ஐ!


நாட்டின் பாதுகாப்பு துறையில் 100 சதவீத வெளிநாட்டு முதலீட்டை அனுமதிப்பதற்கான மத்திய அரசின் நடவடிக்கையை மறுபரிசீலனைச் செய்யவேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இதுத்தொடர்பாக எஸ்.டி.பி.ஐ கட்சியின் தேசிய தலைவர் எ.ஸயீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பாதுகாப்புத் துறையில் 100 சதவீதம் வெளிநாட்டு முதலீட்டை அனுமதிப்பது நாட்டின் பாதுகாப்பை கடுமையாக பாதிக்கும். வெளிநாட்டு முதலீட்டை உயர்த்தினால் இந்திய நிறுவனங்களுக்கு மிகச் சிறந்த தொழில்நுட்பம் கிடைக்கும் என்று கூறுவது கட்டுக்கதையாகும்.
வளர்ச்சியடைந்த நாடுகளில் இருந்து பாதுகாப்பு தொழில்நுட்பம் 3-ஆம் உலக நாடுகளுக்கு கொண்டுவருவதை தடுக்கும் சிறப்பு கட்டமைப்பு அமலில் உள்ளது.
தொலைத்தொடர்பு துறையில் 100 சதவீத வெளிநாட்டு முதலீட்டை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அனுமதித்தது. இந்நடவடிக்கை நாட்டின் பாதுகாப்பிற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பாதுகாப்புத்துறையில் வெளிநாட்டு முதலீட்டை அனுமதிப்பது நிலைமையை இன்னும் மோசமடையச் செய்யும்.
வெளிநாட்டு முதலீடு வருவதன் மூலம் பாதுகாப்புத் துறையில் உற்பத்தி வெளிநாட்டினர் கரங்களுக்குச் செல்லும். இதர தொழில்களைப் போலவே பாதுகாப்புத் துறையையும் காணும் ஆட்சியாளர்கள் நாட்டின் பாதுகாப்பை ஆபத்திற்கு உள்ளாக்குகின்றனர். இச்சூழலில் நாட்டின் பாதுகாப்பு துறையில் 100 சதவீத வெளிநாட்டு முதலீட்டை அனுமதிக்கும் தீர்மானத்தை மறு பரிசீலனைச் செய்யவேண்டும்.
இவ்வாறு அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு துறையில் 100 சதவீத வெளிநாட்டு முதலீட்டை அனுமதிக்கக்கூடாது! - எஸ்.டி.பி.ஐ! பாதுகாப்பு துறையில் 100 சதவீத வெளிநாட்டு முதலீட்டை அனுமதிக்கக்கூடாது! - எஸ்.டி.பி.ஐ! Reviewed by நமதூர் செய்திகள் on 21:20:00 Rating: 5

No comments:

Powered by Blogger.