மியான்மரில் மதமாற்றத்திற்கு தடை!


யங்கூன்: பெரும்பான்மை புத்தமதத்தவர்களின் அடையாளத்தை பாதுகாக்கிறோம் என்ற பெயரில் மியான்மர் அரசு மத மாற்ற தடைச் சட்டத்தை கொண்டுவருகிறது.மத மாறுவதும், பிற மதத்தவர்களை திருமணம் புரிவது குற்றம் என்பதே புதிய சட்டமாகும்.முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மை சமூகங்களின் பரவலை தடுப்பதே இச்சட்டத்தின் நோக்கமாகும்.இதற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு எதிரான தாக்குதலை அதிகரிக்கும் வகையில் புதிய மசோதாவின் வரைவு அமைந்துள்ளது என்று சர்வதேச மதச் சுதந்திரத்திற்கான அமெரிக்க கமிஷன் கருத்து தெரிவித்துள்ளது.இத்தகைய மனிதநேயமற்ற சட்டங்களை அமல்படுத்தினால் மியான்மருடனான உறவை மறு பரிசீலனைச் செய்வோம் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஜான் ஸாகி செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.21-ஆம் நூற்றாண்டில் இத்தகைய சட்டங்களுக்கு இடமில்லை என்று என்று அவர் கூறினார்.
மதம் மாற விரும்புகிறவர்கள் அரசு அதிகாரிகள் அடங்கிய கமிஷனின் அனுமதி பெறவேண்டும் என்று சட்டம் கூறுகிறது.மக்கள் தொகையை கட்டுப்படுத்துவது, பலதார மணத்திற்கு தடைச் செய்வது, பிற மதத்தினரை திருமணம் செய்வதற்கு தடை விதிப்பது உள்ளிட்ட மசோதாக்களும் இச்சட்டத்துடன் தாக்கல்ச் செய்யபட உள்ளன.மசோதாக்களின் வரைவு கடந்த மாதம் வெளியிடப்பட்டது.
தற்போது மியான்மர் பாராளுமன்ற கூட்டம் நடைபெற்று வருகிறது.இம்மாதம் 20-ஆம் தேதிக்கு முன்பு மசோதாக்களுக்கு பாராளுமன்றம் அங்கீகாரம் அளிக்கும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.அண்மையில் மியான்மரில் நடந்த தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பில் மியான்மர் ரோஹிங்கியா முஸ்லிம்களை விலக்கியது சர்வதேச அளவில் எதிர்ப்பை கிளப்பியது.இதனைத்தொடர்ந்து புதிய சட்டத்தை மியான்மர் அரசு கொண்டு வருகிறது.
செய்தி:தேஜஸ்
மியான்மரில் மதமாற்றத்திற்கு தடை! மியான்மரில் மதமாற்றத்திற்கு தடை! Reviewed by நமதூர் செய்திகள் on 21:22:00 Rating: 5

No comments:

Powered by Blogger.