அகதிகள் படகு மூழ்கியது பலி 42!


எகிப்து மத்திய தரைக்கடல் பகுதியில் 550 அகதிகளை ஏற்றி வந்த படகு மூழ்கியதில் 42 அகதிகள் பலியாகி உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. மத்திய கிழக்கு நாடுகள், ஆப்ரிக்காவில் நிலவும் யுத்தம், அரசியல் சூழல் காரணமாக ஏராளமான அகதிகள் ஐய்ரோப்பிய நாடுகளை நோக்கி மத்திய தரைக்கடல் வழியே பயணிக்கின்றனர். ஆபத்தான இந்த கடல் பயணத்தில் சில வருடங்களில் மட்டும் பல்லாயிரம் பேர் மடிந்திருக்கிறார்கள். இந்நிலையில் எகிப்து நாட்டு பகுதியான கபர் அல் சேக் பகுதிக்குட்டபட்ட கடல் எல்லையில் சென்றபோது எதிர்பாராத விதமாக படகு கடலில் மூழ்கியது இதனால் பலர் உயிருக்கு போராடினர்.எனினும் இது குறித்த தகவல் எகிப்து கடற்படையினருக்கு கிடைத்ததும் அவர்கள் அங்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 150 பேரை உயிருடன் காப்பாற்றியுள்ளதாகவும், 42 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அதிகார பூர்வமான தகவல்கள் தெரிவிக்கின்றனர். அதிக அளவு அகதிகளை ஏற்றியதானால் இந்த விபத்து நடந்துள்ளது. இதில் பயணம் செய்தவர்களின் பெரும்பாலானவர்கள் எகிப்தியர்கள். மற்றவர்கள் கிழக்கு ஆஃப்ரிக்கா மற்றும் ஹார்ன் ஆஃப் ஆஃப்ரிக்கா எனப்படும் ஜிபூட்டி, எரித்திரியா, எத்தியோப்பியா மற்றும் சோமாலியாவை சேர்ந்தவர்கள். இவர்கள் இத்தாலிக்கு செல்ல ரோஸெட்டா துறைமுகத்திலிருந்து வெளியேற காத்திருந்த போது இத விபத்து நடந்திருக்கிறது. நீரில் மூழ்கியவர்களை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது, பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.அகதிகளின் வருகை குறித்து ஐரோப்பா நாடுகளிள் தெளிவான தகவல் இல்லை எனவும், எனினும் காப்பாற்றப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் இத்தாலி நோக்கி சென்றதாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.மத்திய தரைக்கடலில் இது போன்ற அகதிகள் படகுகள் கவிழ்ந்து இதுவரை பல உயிர்கள் காவு கொள்ளப்பட்டிருக்கின்றன. இதனால் அகதிகள் தொடர்பில் ஆராயவேண்டிய தேவை ஏற்பட்டிருப்பதாக சமூக ஆர்வலர்கள் கருத்து வெளியிட்டுவருகின்றனர்.
அகதிகள் படகு மூழ்கியது பலி 42! அகதிகள் படகு மூழ்கியது பலி 42! Reviewed by நமதூர் செய்திகள் on 23:52:00 Rating: 5

No comments:

Powered by Blogger.