நிர்வாணமாய் தெரியும் ஊடகங்களின் போலி தர்மமும் போலி நியாயமும்


கடந்த ஏப்ரல் 18, 19 இரு நாட்களும் பெங்களூரில் லட்சக்கணக்கான உழைக்கும் வர்க்கம் வீறுகொண்ட ஆவேசத்துடன் சாலைகளில் திரண்டது; ஆகப்பெரும்பான்மையோர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது; அது தன்னெழுச்சியான போராட்டம். மத்திய மோடி அரசு ’தொழிலாளர்களின் சேமிப்பான ஈபிஎஃப்-ஐ அவர்கள் ஓய்வுபெறும்போது அதாவது 58 வயது நிறைந்த பின்னரே மீட்டு எடுக்க முடியும்’ என்று திடீர் ஆணை பிறப்பித்தது; பெங்களூரின் லட்சக்கணக்கான ஆயத்த ஆடைத்தொழிலாளர்கள்தான் கோபாவேசம் கொண்டு வீதிகளில் திரண்டு இரண்டு நாட்கள் பெங்களூரின் அசைவை நிறுத்தினார்கள்.
இதே காலத்தில் ஆந்திராவிலும் போராட்டம் நடந்தது, அங்கேயும் (எங்கேயும்) பெண்கள்தான் வீதிகளில் திரண்டார்கள். சாமான்ய உழைக்கும் மக்களின் தன்னெழுச்சியான இரண்டு நாட்கள் போராட்டத்தின் விளைவு மோடி அரசு சர்வாதிகாரத்தனமான ஆணையை சத்தமில்லாமல் திரும்பப் பெற்றது;
கடந்த வருடம் இதே செப்டம்பர் மாதம் கேரளாவின் மூணாரில் கண்ணன் தேவன் தேயிலைத்தோட்டத் தொழிலாளர்கள்- இங்கேயும் மலைகளின் வீதிகளில் திரண்டவர்கள் தலைமை ஏற்றவர்கள் பெண்களே- தன்னெழுச்சியான போராட்டம் நடத்தினார்கள். கார்ப்பொரேட் நிறுவனம்+மாநில காங்கிரஸ் அரசு கூட்டணிக்கு எதிரான இப்போராட்டம் கேரள வரலாறு இதுவரை காணாதது.
அரசியல்கட்சிகள், தொழிற்சங்கங்கள் தூண்டாமலே சாமான்ய உழைப்பாளிகள் நடத்திக்காட்டிய இந்த இரண்டு வீச்சான போராட்டங்களையும் மெய்ன்ஸ்ட்ரீம் மீடியாக்கள் – அச்சு ஊடகம், மின்னணு (டிவி) ஊடகம் எதுவும் கண்டுகொள்ளவில்லை; திட்டமிட்டு மறைத்தன என்பது மிக மோசமான உண்மை. ஊடகங்களின் போலி தர்மமும் போலி நியாயமும் நிர்வாணமாய் தெரிந்தது அப்போது.
இப்போது 100 வாகனங்கள் (ஏற்கனவே எரிந்து சாம்பலாகிப்போனவை) தமிழ் சானல்கள், cnn, newstoday, india today…என இப்போதும் டிவிக்களில் எரிந்து கொண்டே இருக்கின்றன;
எரித்தவனின் பக்கம் எந்த நியாமும் இல்லை என்பது எத்தனை உண்மையோ அத்தனை உண்மை எரிகின்ற வீட்டில் புடுங்குவது மிச்சம் என்று மக்களின் உணர்வுகளை தூண்டிவிட்டு இந்த ஒளிபரப்புக்களில் ஒளிந்திருக்கும் டிஆர்பி ரேட்டை பாதுகாக்கும் போலி ஊடக தர்மமும் நியாயமும்.
நிர்வாணமாய் தெரியும் ஊடகங்களின் போலி தர்மமும் போலி நியாயமும் நிர்வாணமாய் தெரியும் ஊடகங்களின் போலி தர்மமும் போலி நியாயமும் Reviewed by நமதூர் செய்திகள் on 23:47:00 Rating: 5

No comments:

Powered by Blogger.