பாதுகாப்பு உபகரணம் இல்லை: துப்புரவு பணியாளர்கள் வேதனை


பாதாளச் சாக்கடை மற்றும் கழிவுநீர் தொட்டிகளில் இறங்கி சுத்தம் செய்யும் துப்புரவு பணியாளர்கள் பல சமயங்களில் விஷ வாயுவால் மூச்சு திணறி உயிரிழக்கின்றனர். மேலும், துப்புரவு பணியாளர்கள் குப்பைகளை அகற்றும்போது இரும்பு கம்பிகள், உடைந்த பாட்டில்கள், ஆணி, மரக்குச்சி போன்றவற்றால் காயம் ஏற்படும் அபாயமும் இருக்கிறது. இதுபோல் பல்வேறு சிக்கல்கள் இருந்துவரும் நிலையில், சிவகங்கை நகராட்சியில் துப்புரவு பணியாளர்கள் பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி மனிதக்கழிவுகளை அகற்றும் பணிகளில் ஈடுப்பட்டு வருகிறனர். இது சமூக ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
100க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் சிவகங்கை நகராட்சியில் வேலை செய்து வருகின்றனர். இவர்களின் பாதுகாப்புக்கான உபகரணங்கள் வாங்குவதில் நகராட்சி நிர்வாகம் தொடர்ந்து அலட்சியமாகச் செயல்பட்டு வருகிறது. இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக துப்புரவு தொழிலாளர்கள் சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதனால் துப்பரவு பணியாளர்கள் மனிதக்கழிவுகளை அகற்றும்போதும் கழிவுநீர் கால்வாயில் ஏற்படும் அடைப்புகளை சரிசெய்யும்போதும் எந்தவித பாதுகாப்பு சாதனங்களும் இல்லாமல் செய்வதாக கூறியுள்ளனர். மேலும், இதனால் நோய் தொற்று அதிகமாக ஏற்பட்டு உடல்நிலை பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். இதுபோன்ற ஆபத்து நிறைந்த பணியை அவர்கள் தினமும் செய்ய வேண்டிய நிலை உள்ளதால் அவர்களுக்கு விரைந்து பாதுகாப்பு உபகரணங்கள் அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
கடந்த மாதம், கழிவுநீர் குழாய்களுக்குள் இறங்கி பணியாற்றுவதற்கு தடை விதிக்க கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில், 'மாற்றம் இந்தியா' அமைப்பின் நிர்வாகி நாராயணன் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை அக்டோபர் 7ஆம் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பாதுகாப்பு உபகரணம் இல்லை: துப்புரவு பணியாளர்கள் வேதனை பாதுகாப்பு உபகரணம் இல்லை: துப்புரவு பணியாளர்கள் வேதனை Reviewed by நமதூர் செய்திகள் on 21:34:00 Rating: 5

No comments:

Powered by Blogger.