பாஜக ஒரு சாதிய மனநிலை உடைய கட்சி! - மாயாவதி!


உத்திரப்பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருமான மாயாவதி, பாஜக ஒரு சாதி மனநிலை உடைய கட்சி எனக் கூறியுள்ளார். மாயாவதி டெல்லியில் சில பங்களாக்களை வாங்கியதாக பாஜக தலைவர் அமித்ஷா விமர்சித்திருந்தார். “மாயாவதி பங்களா வாங்க செலவிடும் பணத்தை தலித் மக்களுக்கு செலவளித்திருந்தால், ஒவ்வொரு தலித்துகளின் வீடுகளும் வசதி நிறைந்தவையாக மாறியிருக்கும்” என்று கூறியிருந்தார். அமித்ஷாவின் இந்த விமர்சனத்துக்குப் பதிலடி கொடுத்த மாயாவதி “தலித் சமூகத்தைச் சார்ந்த ஒருவரது மகள் பங்களாவில் வசிப்பதை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. அந்த ஆற்றாமையில்தான் அப்படிப் பேசுகிறார்கள். பாஜக, ஒரு சாதிய மனநிலை உடைய கட்சி” என்று குறிப்பிட்டார்.
பாஜக ஒரு சாதிய மனநிலை உடைய கட்சி! - மாயாவதி! பாஜக ஒரு சாதிய மனநிலை உடைய கட்சி! - மாயாவதி! Reviewed by நமதூர் செய்திகள் on 23:51:00 Rating: 5

No comments:

Powered by Blogger.