கருணை மரணம் கேட்டு பிரதமருக்கு கடிதம்!


நாட்டின் தேவைக்காகவும், அதன் வளர்ச்சிக்காகவும் பல்வேறு திட்டங்களின் மூலம் உதவியளித்து வரும் பிரதமர் மோடி, தனிப்பட்டவர்கள் அனுப்பும் தகவல்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து உதவிகள் செய்து வருகிறார். இந்நிலையில் மத்தியப்பிரதேசம் மாநிலம் போபாலைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண், பட்டதாரியாக இருந்தும் தனக்கு வேலை கிடைக்காததால் தற்கொலை செய்துகொள்ள அனுமதி கேட்டு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ள தகவல் வெளியாகியுள்ளது. மத்தியப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண் லட்சுமி யாதவ். இரு கால்களையும் இழந்து ஊன்றுகோலின் துணையுடன் வாழ்ந்துவரும் இவர், தத்துவத்தில் முதுநிலை பட்டமும் சட்டப்படிப்பில் முதுநிலை பட்டமும் பெற்று, இரட்டை பட்டதாரியாகி, அரசு வேலையை எதிர்பார்த்து நீண்டகாலமாக காத்திருந்தார்.
மாற்றுத்திறனாளிகளுக்கு அரசுப் பணிகளில் 3 சதவிகித இடஒதுக்கீடு இருந்தும் தனக்கு இன்னும் வேலை கிடைக்காததால் மனம் வெறுத்துப்போன லட்சுமி, 'வாழத்தான் வழியில்லை, தற்கொலை செய்துகொண்டு சாவதற்காவது அனுமதி தாருங்கள்' எனக்கேட்டு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இதே கடிதத்தின் நகல்களை வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், மத்தியப்பிரதேசம் மாநில முதல்வர் சிவராஜ் சவுகான் ஆகியோருக்கும் இவர் அனுப்பியுள்ளார். இந்த கடிதம் ஏதாவது ஒரு வகையில் உயிரை மாய்த்துக்கொள்ளாமல் இவருக்கு உதவும் என்று நம்புவோம்.
கருணை மரணம் கேட்டு பிரதமருக்கு கடிதம்! கருணை மரணம் கேட்டு பிரதமருக்கு கடிதம்! Reviewed by நமதூர் செய்திகள் on 01:12:00 Rating: 5

No comments:

Powered by Blogger.