நிலுவையில் 22.90 லட்சம் வழக்குகள்!

நிலுவையில் 22.90 லட்சம் வழக்குகள்!

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக, நாட்டில் உள்ள கீழமை நீதிமன்றங்களில் சுமார் 22.90 லட்சம் வழக்குகள் நிலுவையில் இருப்பதாகப் புள்ளிவிவரம் ஒன்றில் தெரியவந்துள்ளது.
தேசிய நீதித் துறை தகவல் சேமிப்பு அமைப்பானது, சமீபத்தில் ஒரு புள்ளிவிவர அறிவிப்பை வெளியிட்டது. அதில், சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நாடு முழுவதும் உள்ள கீழமை நீதிமன்றங்களில் சுமார் 22 லட்சத்து 90 ஆயிரத்து 364 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவற்றில் சுமார் 5.97 லட்சம் வழக்குகள் சிவில் வழக்குகளாகவும், சுமார் 16.92 லட்சம் வழக்குகள் கிரிமினல் வழக்குகளாகவும் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.
இதேபோன்று, நாடு முழுவதும் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் சுமார் 2.5 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதன் அடிப்படையில், கீழமை நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 8.29 சதவிகிதம்.
முன்னதாக, 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருக்கும் வழக்குகளை விரைந்து விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு, நாட்டிலுள்ள 24 உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகளையும் மத்திய அரசு சமீபத்தில் அறிவுறுத்தியிருந்தது.
நிலுவையில் 22.90 லட்சம் வழக்குகள்! நிலுவையில் 22.90 லட்சம் வழக்குகள்! Reviewed by நமதூர் செய்திகள் on 03:56:00 Rating: 5

No comments:

Powered by Blogger.