நிர்மலா சீதாராமனுக்கு ஜேஎன்யூ கண்டனம்!

நிர்மலா சீதாராமனுக்கு ஜேஎன்யூ  கண்டனம்!

ஜேஎன்யூவில் இந்தியாவிற்கு எதிரான போரைத் தொடுத்து வருகிறார்கள் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதற்கு அந்தப் பல்கலைக்கழக மாணவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சில நாட்களுக்கு முன்னதாக, ஜேஎன்யூவில் நடப்பது குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, சில ஆண்டுகளாக அந்தப் பல்கலைக்கழகத்தில் நடப்பது எதுவும் நன்றாக இல்லை. உங்களுக்கு உடன்பாடில்லாத சிந்தாந்தத்தைக் கொண்டிருக்கும் ஒரு கட்சியைக் கொண்டிருப்பது வேறு. ஆனால் அவர்கள் இந்தியாவுக்கு எதிரான சக்திகளால் தலைமை தாங்கப்படுகிறார்கள் அதைப் பொறுத்துக்கொள்ள முடியாது எனத் தெரிவித்துள்ளார்.
அவர்கள் விநியோகித்த பிரசுரங்களில் இந்தியாவுக்கு எதிரான ஒரு போரை தொடுத்திருக்கிறார்கள். அது என்னை சங்கடப்படுத்துகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
நிர்மலா சீதாராமனின் இந்தக் கருத்தை ஜேஎன்யூ மாணவர் சங்கம் வன்மையாகக் கண்டித்துள்ளது. இது தொடர்பாக ஜேஎன்யூவில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாணவர் சங்கத் தலைவர் என்.சாய் பாலாஜி கூறுகையில், நிர்மலா சீதாராமன் ஜேஎன்யூவின் முன்னாள் மாணவர். அவர் அம்பானிக்கு ரபேல் ஒப்பந்தத்தில் ஏன் உதவி செய்யப்பட்டது என்ற கேள்விக்கு பதிலளிக்க மறுத்துவருகிறார்.
பாஜகவினர் தேசபக்தர் எதிர் தேச விரோதிகள் என்று விவாதத்தை திசை திருப்புகின்றனர். உண்மையான பிரச்சினைகளான ரபேல் ஒப்பந்தம், ஜியோ பல்கலைக்கழகம் மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவற்றைப் பேச மறுக்கின்றனர். பொது நிதியில் இயங்கும் கல்வி நிலையங்களை கார்ப்பரேட்டுகளிடம் தாரை வார்க்க முடிவு செய்துவி்ட்டனர் என்றும் அவர் தெரிவித்தார்.
நிர்மலா சீதாராமனுக்கு ஜேஎன்யூ கண்டனம்! நிர்மலா சீதாராமனுக்கு ஜேஎன்யூ கண்டனம்! Reviewed by நமதூர் செய்திகள் on 04:02:00 Rating: 5

No comments:

Powered by Blogger.