வாஞ்சிநாதனால் கொல்லப்பட்ட ஆஷ்துரை நினைவிடத்தில் ஆதித் தமிழர் கட்சியினர் அஞ்சலி ...
நெல்லை: சுதந்திரப் போராட்ட தியாகியாகப் போற்றப்படும் வாஞ்சிநாதனால் கொல்லப்பட்ட ஆங்கிலேய ஆட்சியர் ஆஷ்துரை நினைவிடத்தில் ஆதித் தமிழர் கட்சியினர் அஞ்சலி செலுத்தி இருப்பது நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நெல்லை மாவட்ட ஆட்சியராக இருந்த ஆஷ்துரை மணியாச்சி ரயில் நிலையத்தில் வாஞ்சிநாதன் என்ற இளைஞரால் 1911ஆம் ஆண்டு ஜூன் 17-ந் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். அதே இடத்தில் வாஞ்சிநாதனும் தம்மைத் தாமே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனால் கொடுங்கோலராக ஆஷ்துரையும் சுதந்திரப் போராட்ட தியாகியாக வாஞ்சிநாதனும் போற்றப்பட்டு வருகின்றனர். ஆண்டுதோறும் வாஞ்சிநாதன் நினைவுநாளில் அவரது நினைவிடத்தில் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வும் நடைபெற்று வருகிறது.
ஆனால் ஆய்வாளர்களோ, மனிதர்களிடையே நிலவிய ஜாதிய ஏற்றத் தாழ்வுகளைக் களையத்தான் ஆஷ்துரை பாடுபட்டார்; தலித் மக்கள் மீதான ஒடுக்குமுறையை தகர்த்தவர் ஆஷ்துரை என பல்வேறு ஆதாரங்களை வெளியிட்டுள்ளனர். அத்துடன் வாஞ்சிநாதன், நாட்டு விடுதலைக்காக அந்த தாக்குதலை நடத்தவில்லை; இந்துக்களின் சனாதான தர்மத்தை; ஜாதிய வேறுபாடுகளை களைவதற்காக பாடுபட்டார் என்ற காரணத்தாலேயே ஆஷ்துரையை சுட்டுக் கொன்றார்; இதற்கு வாஞ்சிநாதன் எழுதி வைத்த கடிதமே சாட்சி என்றும் கூறுகின்றனர்.
இது தொடர்பான வாதப் பிரதிவாதங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் நேற்று வாஞ்சிநாதனின் நினைவு நாள் கடைபிடிக்கப்பட்டது. அதே நேரத்தில் ஆதித் தமிழர் கட்சியினர் ஆஷ்துரை நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
வாஞ்சிநாதனால் கொல்லப்பட்ட ஆஷ்துரை நினைவிடத்தில் ஆதித் தமிழர் கட்சியினர் அஞ்சலி ...
Reviewed by நமதூர் செய்திகள்
on
07:30:00
Rating:
No comments: