ஐஏஎஸ் தேர்வு நேர்காணலில் எஸ்.சி., எஸ்.டி.-க்கு எதிரான போக்கு: தலித் மற்றும் முஸ்லிம் மகாசங்கம் குற்றச்சாட்டு
யு.பி.எஸ்.சி. (ஐஏஎஸ் தேர்வுகள்) நேர்காணல் செய்யும் அதிகாரிகள் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு எதிராக செயல்படுகின்றனர் என்று அகில பாரத தலித் மற்றும் முஸ்லிம் மகாசங்கம் என்ற அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.
அதாவது, நேர்காணலில் தாழ்த்தப்பட்ட / பழங்குடியினப் பிரிவினருக்கு மற்ற பிரிவினரைக் காட்டிலும் குறைவான மதிப்பெண்களை வழங்கியதாக இவர்கள் தங்கள் தரப்பு தரவுகளை வெளியிட்டுள்ளனர்.
எழுத்து முறை தேர்வுகளில் எஸ்சி/எஸ்டி பிரிவினர் பொதுப்பிரிவினரைக் காட்டிலும் அதிக புள்ளிகளைப் பெற்றுள்ளனர். ஆனால் நேர்காணலில் எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு குறைவான மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது என்கிறது இந்த அமைப்பு.
“இதனால் ஐஏஎஸ் பொறுப்புக்கு தகுதி பெறுவதில் பொதுப்பிரிவினருக்கே அதிக சாதகச் சூழ்நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
எழுத்து முறை தேர்வுகளில் எஸ்சி/எஸ்டி பிரிவினர் சிறப்பாக மதிப்பெண்கள் பெற்றுள்ள நிலையில், நேர்காணல்களில் 200 மதிப்பெண்களுக்கும் குறைவாக பெற்றுள்ளனர் என்பதை நம்புவது கடினமாக உள்ளது.
மேலும் எழுத்து முறைத் தேர்வில் இவர்களைக் காட்டிலும் குறைவாக மதிப்பெண் பெற்றவர்கள் நேர்காணல்களில் அதிக மதிப்பெண் பெற்றுள்ளனர். இடஒதுக்கீடு பிரிவினருக்கு எதிராக ஒருதலைபட்சமாக நேர்காணல் அதிகாரிகள் செயல்பட்டதற்கு இதுவே சான்று” என்று அகில் பாரத தலித் மற்றும் முஸ்லிம் மகாசங்க தேசியத் தலைவர் சுரேஷ் கனோஜியா குற்றம்சாட்டியுள்ளார்.
இதனையடுத்து விசாரணை நடத்த வேண்டும் என்று இந்த அமைப்பு யு.பி.எஸ்.சி.யிடம் கோரிக்கை எழுப்பியுள்ளது.
ஐஏஎஸ் தேர்வு நேர்காணலில் எஸ்.சி., எஸ்.டி.-க்கு எதிரான போக்கு: தலித் மற்றும் முஸ்லிம் மகாசங்கம் குற்றச்சாட்டு
Reviewed by நமதூர் செய்திகள்
on
22:06:00
Rating:
No comments: